உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேடப்பட்ட ரவுடிகள் மொஹாலியில் கைது

தேடப்பட்ட ரவுடிகள் மொஹாலியில் கைது

சண்டிகர்:குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மூன்று ரவுடிகளைக் கைது செய்த போலீசார், துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து, பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது:பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட, நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த பவித்தர் சவுரா, ஹுசன்தீப் சிங் மற்றும் சவுரா மாத்ரே ஆகிய மூவரையும் மாநில சிறப்புப் படையினர் கைது செய்தது.அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி, 15 தோட்டாக்கள் மற்றும் ஒரு டொயோட்டா பார்ச்சூனர் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மூவர் மீதும் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, ஆயுதக்கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உட்பட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மூவரும் வேறு பெயர்களில் மொஹாலியில் வசித்து வந்த நிலையில் சிறப்புப் படையிடம் சிக்கிஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை