மேலும் செய்திகள்
இலங்கை தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றத்தில் வரவேற்பு
9 minutes ago
ஹிந்துக்களின் பொறுப்பு!
11 minutes ago
புதுடில்லி: மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த, 12.68 லட்சம் அதிகாரப்பூர்வ, 'இ - மெயில்' கணக்குகள், 'ஜோஹோ' தளத்திற்கு மாற்றப்பட்டு உள்ளதாக லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டது. திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அதிகாரப்பூர்வ மின்னஞ் சல் சேவைகளை வழங்கும் தளமாக என்.ஐ.சி., எனப்படும் தேசிய தகவல் மையம் இயங்கி வருகிறது. இதன் மூலம், 'ஜோஹோ' நிறுவனத்துடன் இணைந்து அரசுப் பணியாளர்களுக்கு தங்கு தடையின்றி மிக வலுவான இ - மெயில் சேவையை வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் உருவாக்கப்படும் அனைத்து தரவுகளும், அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். இதில் ஏதேனும் சிக்கல் எழுந்தால், அதற்கான தீர்வை ஏற்படுத்தி தரவும் அந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, நவீன காலத்திற்கு ஏற்ப அலுவலக உற்பத்தித் திறனை அதிகரிக்க செய்வதுடன், அரசு ஊழியர்களின் டிஜிட்டல் பணி அனுபவத்தை மேம்படுத்தும். மொத்தம், 50 லட்சம் ஊழியர்கள் உள்ள நிலையில், தற்போது, 12.68 லட்சம் ஊழியர்களின் கணக்குகள், 'ஜோஹோ' நிறுவனத்தின் இ - மெயில் முகவரி கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளன. இதில், 7.45 லட்சம் கணக்குகள், மத்திய அரசு ஊழியர்களுக்குச் சொந்தமானவை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
9 minutes ago
11 minutes ago