உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "விவசாயிகளின் அச்சத்தை போக்க பா.ஜ., தவறிவிட்டது": ராகுல் பேச்சு

"விவசாயிகளின் அச்சத்தை போக்க பா.ஜ., தவறிவிட்டது": ராகுல் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: ''விவசாயிகளின் அச்சத்தை போக்க பா.ஜ., தவறிவிட்டது'' என காங்கிரஸ் எம்.பி ராகுல் குற்றம் சாட்டி உள்ளார். காங்கிரஸ் எம்.பி., ராகுல் தனது பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையின் போது, பீஹார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் விவசாயிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது ராகுல் பேசியதாவது: விவசாயிகளின் நிலங்களை அரசு பறிக்கிறது. நிலம் பறிக்கப்பட்டு அதானி போன்ற பெரிய தொழிலதிபர்களுக்கு பரிசாக கொடுக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்களை கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி செய்தார். இதற்கு நாட்டின் அனைத்து விவசாயிகளும் எதிர்த்து நின்றது நல்லது. விவசாயிகளின் அச்சத்தை போக்க பா.ஜ., தவறிவிட்டது. விவசாயிகளும் அரசின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர். இருப்பினும் விவசாயிகளின் நம்பிக்கையை மீண்டும் பெற காங்கிரஸ் அரசு முயற்சிக்கும் என்று நான் உறுதியளிக்க விரும்புகிறேன்.

முதுகெலும்பு

விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்று நான் நினைக்கிறேன். கோடீஸ்வரர்களின் 14 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகளின் கடனை அரசு தள்ளுபடி செய்யவில்லை. மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மீறுகிறது. இந்த பிரச்னையை உங்களுக்காக பார்லியில் நான் கேள்வி எழுப்ப முடியும். இதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் என உத்தரவாதம் அளிக்க முடியாது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் பிரச்னைளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு ராகுல் பேசினார்.

வெறுப்பு, வன்முறை

மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வெறுப்பு மற்றும் வன்முறையின் சித்தாந்தம் காந்தியை இதே நாளில் பறித்துச் சென்றது. வெறுப்பு சித்தாந்தம் காந்தியின் கொள்கைகள் லட்சியங்களை நம்மிடமிருந்து பறிக்க முயல்கிறது. வெறுப்பு என்னும் புயலில் உண்மை மற்றும் நல்லிணக்கத்தின் சுடர் அணைந்துவிடக் கூடாது. இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

NicoleThomson
ஜன 31, 2024 05:31

வாரிசு சார் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி தானே நடக்குது , இரண்டு நாள் முன்னர் விவசாய பல்கலையின் இடங்களை அத்துமீறி கையகப்படுத்தியதால் போராடிய மாணவிகளின் தலைமுடியை பிடித்து பைக்ஓட்டி கொண்டு இழுத்து சென்ற காவலர்களை என்ன செய்தது காங்கிரஸ் அரசு?


பேசும் தமிழன்
ஜன 30, 2024 20:16

எங்களுடைய நாட்டின் விவசாயிகளுக்கு என்ன தேவையோ அதை மோடி அவர்கள் செய்து வருகிறார்... நீங்கள் உங்கள் அபிமான... இத்தாலி... பாகிஸ்தான்... சீனா நாடுகளை பற்றி கவலைப்படுங்கள்.


J.V. Iyer
ஜன 30, 2024 20:06

விவசாயிகள்,பாப்பு பேசுவதை பார்த்து தான் அச்சப்படுகிறார்கள்.


vbs manian
ஜன 30, 2024 19:55

விவசாயிக்கு மோடி அரசு பல திட்டங்களை கொடுத்துள்ளது.மக்களை திசை திருப்பும் முயற்சி.


DVRR
ஜன 30, 2024 16:58

குழந்தாய் விவசாயி என்றால் என்று சொல்வாயா நீ???ஆடி கார் பெரிய பண்ணைவீடு வைத்திருப்பவர் ஜமீந்தார் எப்படியப்பா விவசாயி ஆக முடியும்???நீ சொல்வது அவர்களை விவசாயி என்று???


ஆரூர் ரங்
ஜன 30, 2024 16:24

காங்கிரஸ் ஆளும் எல்லா மாநிலங்களிலும் அடானி முதலீடுகள் செய்துள்ளார். இன்னமும் அம்மாநில முதல்வர்கள் அடானியை வருந்தி???? அழைக்கிறார்கள். முடிந்தால் தடுத்துப் பாருங்க.


ஆரூர் ரங்
ஜன 30, 2024 16:22

நெய்வேலி நிலக்கரி நிறுவனமும் BHELம் பாலைவன நிலத்திலேயா காங்கிரஸ் உருவாக்கியது? ராபர்ட் வதேரா நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை???? வாங்கியிருப்பது விவசாயம் செய்யவா?


Duruvesan
ஜன 30, 2024 16:04

இவரு இப்போ விவசாயி. அடுத்த மாதம் டிரைவர், barber, ஹிந்து. அதுக்கு அடுத்த மாதம் முஸ்லீம்


vadivelu
ஜன 30, 2024 14:43

நாம் 2045ல், ஆட்சிக்கு வந்து விடுவோம் அப்போது நாம் பார்த்து நல்லது செய்து விடுவோம்.ஓகேவா.


Raa
ஜன 30, 2024 14:34

கொசு பேட் இருந்தால் கொண்டாங்கப்பா... இங்க ஒன்னு காத்து கிட்ட கொயீங்...கொயீங்... ன்னு சவுண்டு போட்டுக்கொண்டே இருக்கு.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை