உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "எல்லை பிரச்னைகளில் கவனம் செலுத்தப்படும்": ஜெய்சங்கர் உறுதி

"எல்லை பிரச்னைகளில் கவனம் செலுத்தப்படும்": ஜெய்சங்கர் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'எல்லை பிரச்னைகளில் கவனம் செலுத்தப்படும்' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார்.டில்லியில் சவுத் பிளாக்கில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில், வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் ஜெய்சங்கர் கூறியதாவது: வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பு மீண்டும் ஒருமுறை வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு மகத்தான மரியாதையாகும். கடந்த காலத்தில், இந்த அமைச்சகம் சிறப்பாகச் செயல்பட்டது. கோவிட் காலத்தில் சவால்களை திறமையாக எதிர்கொண்டோம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9e62b3bg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

எல்லை பிரச்னைகள்

கடந்த ஆட்சி காலத்தில் ஆபரேஷன் கங்கா மற்றும் ஆபரேஷன் காவேரி போன்ற முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். எல்லை பிரச்னைகளில் கவனம் செலுத்தப்படும். பாகிஸ்தானைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளாக நிலவும் எல்லை தாண்டிய பயங்கரவாதப் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

பெரிய விஷயம்

ஜனநாயக நாட்டில், ஒரு அரசு தொடர்ச்சியாக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்படுவது பெரிய விஷயம். பிரதமர் மோடியின் தலைமையில் வெளியுறவுத்துறை சிறப்பாக செயல்படும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். நெருக்கடி காலங்களில் உலக நாடுகளுக்கு உதவி செய்வதால், இந்தியா படிப்படியாக வளர்ந்து வருகிறது. உலக நாடுகள் இந்தியாவை நம்புகிறது. இதனால் நமது பொறுப்புகள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Easwar Kamal
ஜூன் 11, 2024 16:52

முதலில் தமிழகத்தில் இருந்து ஆரம்பியுங்கள். நீண்ட நாள் ப்ரிச்சனை உள்ள இலங்கை /தமிழகம் மீன்வர்களின் பரிசினை. கச்ச தீவுக்கு அருகில் ஒருசெயற்கை தீவை உருவாக்கி கண்காணிக்கலாம் இதன் மூலம் நம் தமிழக மீன்வர்கல் ப்ரிச்சனை முடிவுக்கு வரலாம். அதன் பிறகு கர்நாடக/தமிழக தண்ணிர் ப்ரிச்சனை. அதையும் அரசியல் வாதிகள் அரசியல் செய்யாமல் அறிவியல் பூர்வமாக ப்ரிச்சனை முடிவுக்கு கொண்டு வரல.


Kumar Kumzi
ஜூன் 11, 2024 15:16

எங்க விடியாத விடியல் வெளியுறவுத்துறை அமைச்சராக செயல் பட்டால் நிலைமை எப்படி இருக்கும் ஹீஹீஹீ


Mohamed Ibrahim
ஜூன் 11, 2024 13:21

சீனாவும் இந்தியாவின் எல்லை நாடு என்பதை அமைச்சருக்கு நினைவூட்டகிறோம்


Kumar Kumzi
ஜூன் 11, 2024 15:03

பார்ர்ரா பங்களாதேஷ்க்காரன் கவலைப்படுறான்


Rajah
ஜூன் 11, 2024 13:06

பல இத்தாலிய மாபியாக்கள் அகத்தே உள்ளனர். இதிலும் கவனம் தேவை.


Rajah
ஜூன் 11, 2024 12:46

நேற்று ஆரத்தழுவி அவர்களுக்கிடையில் நடந்தபேச்சு வார்த்தைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வெளிநாட்டு சக்திகள் மற்றும் காந்தி என்ற பெயரில் இருக்கும் உள்நாட்டு சக்திகள் மீதும் ஒரு அவதானம் தேவை. சமூக நீதி என்ற பெயரில் சன்னி லியோன் என்ற நடிகையை பிரதமர் பதவிக்கு தெரிவு செய்து விடுவார்கள். திராவிடர்களுக்கும் இத்தாலியர்களுக்கும் இதில் எந்த பாதிப்பும் இல்லை. இந்தியர்களை அழிப்பதில் இந்தியா என்ற பெயரில் ஏதும் செய்வார்கள்.


Svs Yaadum oore
ஜூன் 11, 2024 12:45

கச்சத்தீவை இந்திராகாந்தியால் தாரை வார்க்கப்பட்டது. அப்போது மாநிலத்தில் ஆட்சியில் இருந்த ஈரோடு ஈர வெங்காயம் என்ன செய்தது? அதே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து டெல்லியில் மந்திரி பதவி சுகம் அனுபவித்தபோது விடியலுக்கு கச்ச தீவு பற்றி நினைவு வரவில்லையா? கட்ச தீவு பற்றி இப்போது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியுடன் கேட்க வேண்டியது தானே. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கச்ச தீவு மற்றும் காவேரி பிரச்சனை பற்றி என்ன சொல்லுது ??....


Apposthalan samlin
ஜூன் 11, 2024 12:09

இனி இருக்கிற எல்லைகளையாவது பாத்து காக்க வேண்டும்


hari
ஜூன் 11, 2024 13:09

ஆமாம்...இல்லையென்றால் காங்கிரஸ் வந்தால் மொத்தமாக கொடுத்துவிடுவோம்.... அப்படித்தானே......


சோழநாடன்
ஜூன் 11, 2024 11:39

வெளியுறவு துறை அமைச்சர் வெளிநாடுகளுக்குச் சென்று கிழிப்பது அப்புறம் இருக்கட்டும். இந்திய எல்லைப் பகுதியில் சீனா ஆக்கிரமித்து பல நூறு வீடுகளைக் கட்டியுள்ளதாக பத்திரிக்கையில் செய்தி வருகின்றது. அதை மோடி மறுக்கவில்லை. ஆனால் இந்திய எல்லைகளைக் காப்போம் என்று தேசபக்தி பேசிக்கொண்டிருக்கின்றது. முதலில் அதைப் பாருங்கள். அப்புறம் கச்சத்தீவை இந்திராகாந்தியால் தாரை வார்க்கப்பட்டதையும் இலங்கையிடமிருந்து மீட்டுவிடுங்கள் போதும். அப்புறம் மிச்சம் இருக்கிற 4 ஆண்டுகள் மகிழ்ச்சியாக இருந்து விடைபெறுங்கள் அமைச்சரே.....


Rajah
ஜூன் 11, 2024 13:01

சோழ நாட்டையும் புலிக் கொடியையும் கொண்ட தங்கள் பெயர் எனக்கு பிடித்திருக்கின்றது. சேரர்கள் பாண்டியர்கள் பற்றிய தங்கள் கருத்ததையும் அறிய ஆவல் இருக்கிறது. தவில் இசை நிலைத்து இருக்குமா?


Vasoodhevun KK
ஜூன் 11, 2024 13:10

இந்த மாதிரி அறைவேக்காடுகளாதான்.... வெளியுறவு அமைச்சக வேலைய இவரு கிட்ட அமைச்சர் ஜெய்சங்கர் கத்துக்கிடனும். நேரு ஆட்சியில் ஆக்கிரமிப்பு செய்த சில இடத்தில் தற்போதைய இந்திய அரசு மீட்க வந்தால் என்ன செய்ய என்று சீனா தனது இருப்பை நிலைநிறுத்த இதை செய்கிறது. பத்திரிகையில் வரும் எல்லா செய்தியும் நம்பகத்தன்மை இல்லை. இன்றைய ஊடகங்கள் அதன் நிலையை இழந்து விட்டன.


HoneyBee
ஜூன் 11, 2024 13:34

நல்லா உருட்டு.. எரியும்போது இப்படி தான் பேச தோன்றும். 65 வருடங்கள் இருந்த திராவிட மாடல் ஆட்சியை மற்றும் நேரு குடும்ப ஆட்சியையும் இப்படி கேள்வி கேட்டு இருந்தால் நீங்கள் உருப்படியாக இருந்து இருப்பீர். ₹200 அடிமைகளுக்கு புத்தி வராது


Karthikeyan
ஜூன் 11, 2024 15:08

சீனா நம் நாட்டின் எல்லையை ஆக்கிரமித்தது நேரு மற்றும் இந்திராகாந்தி ஆட்சி காலத்தில்தான் சார். அப்போது பிஜேபி-யா ஆட்சியிலிருந்தது? இப்போது வெளிநாட்டில் இந்தியர்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது


Svs Yaadum oore
ஜூன் 11, 2024 11:02

இவர் வெளியுறவுத்துறை அமைச்சரானால் இங்குள்ள ஈர வெங்காய டாஸ்மாக் மதம் மாற்றி திராவிடனுக்கு ஏன் பொங்குது ?? யார் அமைச்சர் என்பது ப ஜா க முடிவு செய்யும் ...இங்குள்ள திராவிடனுங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது ....நிதி அமைச்சரும் அப்படித்தான்...எந்த அமைச்சரும் ஊழல் செய்யாத அமைச்சராக இருக்கனும் ....அதுதான் அடிப்படை தகுதி .....இங்குள்ள திராவிட மந்திரி சபையில் உள்ள மந்திரிகள் எல்லாம் தமிழனுங்களா ??.....திராவிட மதுரை மாஜி நிதி அமைச்சர் இப்பொது எந்த துறை மந்திரி ??....


saravanan
ஜூன் 11, 2024 10:46

வாழ்த்துகள்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை