உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் சென்ற பிரிட்டன் தூதர்: மத்திய அரசு கடும் எதிர்ப்பு

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் சென்ற பிரிட்டன் தூதர்: மத்திய அரசு கடும் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தானுக்கான பிரிட்டன் தூதர், ஆக்கிரமிப்பு காஷ்மீர் சென்றதற்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.பாகிஸ்தானுக்கான பிரிட்டன் தூதர் ஆக இருப்பவர் ஜேன் மேரியட். இவர் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மிர்புர் பகுதிக்கு சென்றதுடன் அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தானுக்கான பிரிட்டன் தூதர், தனது நாட்டு அதிகாரிகளுடன் கடந்த 10ம் தேதி, ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்றது ஆட்சேபனைக்குரியது. இதனை இந்தியா கவனத்தில் எடுத்துக் கொண்டு உள்ளது. இந்த அத்துமீறல் குறித்து, டில்லியில் உள்ள பிரிட்டன் தூதரிடம் கடுமையான எதிர்ப்பை வெளியுறவுத்துறை செயலாளர் பதிவு செய்துள்ளார்.யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இது எப்போதும் நீடிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்புசாமி
ஜன 14, 2024 08:00

பிரிட்டனுக்கு எதுக்கு ராஜநாதர் போயிருக்காரு?


Barakat Ali
ஜன 14, 2024 12:49

இந்தம்மா சின்னத்தனம் செய்யிறதை மனசுல வெச்சுக்கிட்டு நமக்கு ஆதாயமான விசயத்துக்கு பிரிட்டன் போகாமே இருக்க முடியுமா ????


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 14, 2024 07:55

அதாவது அதையும் பாகிஸ்தானின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதியாகக் காட்ட முனைந்திருக்கிறார் ..... இதில் நாம் எரிச்சல் அடைவதை விட அதை மீட்க ஏதாவது முயற்சி செய்திருக்கிறோமா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் .....


R SRINIVASAN
ஜன 14, 2024 04:51

நேரு இந்த நாட்டுக்குச் செய்த துரோகம் காஷ்மீர் பிரச்னையை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்றதுதான் . ஆகவே காங்கிரெஸ்ஸை இந்த தேர்தலில் தோற்கடியுங்கள்


Sathyasekaren Sathyanarayanana
ஜன 13, 2024 23:52

அவர்களால் உருவாக்கப்பட்ட விஷவிருச்சகம் எவ்வளவு தூரம் வளர்ந்து இருக்கிறது என்று பார்க்க சென்று இருப்பார்கள்


Vijay D Ratnam
ஜன 13, 2024 23:34

காஷ்மீர் இந்திய நாட்டின் ஒரு மாநிலம். பாரதமாதாவின் தலை என்று இந்தியர்கள் நாம் 77 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.சோத்துக்கு வழியில்லாத பிச்சைக்கார நாடாக இருக்கும் பாகிஸ்தானிடம் இருந்து வல்லரசாக போகிறோம் என்று சொல்லிக்கொண்டே இருக்கும் இந்தியா, காஷ்மீரை மீட்டெடுக்காமல் அவன் வந்துட்டான் இவ வந்துட்டான்னு ஒப்பாரி வைப்பது அசிங்கமா இல்லியா. 1997 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி ஹாங்காங் சீனாவுடன் இணைந்தது. அதற்கு முன் சீனாவிடம் ஹாங்காங்கை மேலும் ஒரு பத்து ஆண்டுகள் நீட்டிக்க விருப்பம் தெரிவித்தது இங்கிலாந்து. அப்போதைய சீன அதிபர் ஜியாங் சேமின் சொன்ன வார்த்தைகள் உலகப்பிரசித்தம். ஜூன் 30 ஆம் தேதிக்குள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஹாங்காங்கை விட்டு வெளியேறாவிட்டால் ஜூலை 1 ஆம் தேதி சீன ராணுவம் லண்டன் மாநகரை தகர்க்கும் என்றார். சத்தம் போடாமல் பிரிட்டிஷ் கொடியை கழட்டி சுருட்டி எடுத்துக்கொண்டு விமானம் ஏறினார் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ். இது குறித்து அப்போது டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் தோல்வியடைந்த மன்னன் நாட்டை இழந்துவிட்டு களையிழந்து முகத்தோடு தாய்நாடு திரும்பிய மன்னன் முகம் போல் இருந்தது சார்லஸின் முகம் என்று எழுதியது. ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க அருமையான காலகட்டம் இது. ஜியோ பாலிடிக்ஸ் எப்படி வேண்டுமானாலும் மாறும். சீனாவும் இங்கிலாந்தும் அமெரிக்காவும் பாகிஸ்தானுக்கு ஆதரவு என்று முடிவெடுத்துவிட்டால் இன்னும் இருநூறு ஆண்டுகள் ஆனாலும் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவால் மீட்க முடியாது. காலம் நேரம் எப்போது மாறும் யாருக்கு சாதகமாகும் என்று யாராலும் கணிக்க முடியாது. இப்போது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கிறது காலம், நேரம், வாய்ப்பு.


வெகுளி
ஜன 13, 2024 18:15

இந்தியாவோடு நிரந்தரமாக இணைவதற்கு முன்னால் கடைசியா ஒருமுறை ஆக்கிரமிப்பு பகுதியை பாத்துட்டு வரலாம்னு போயிருப்பாங்க...


வெகுளி
ஜன 13, 2024 18:10

காமெடி பீசு பிரிட்டனுக்கு இன்னும் தான் ஒரு நாட்டாமை என்ற நினைப்பு...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை