உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கள்ளக்காதலை கண்டித்த கணவரை கொன்ற மனைவி உட்பட 5 பேர் கைது

கள்ளக்காதலை கண்டித்த கணவரை கொன்ற மனைவி உட்பட 5 பேர் கைது

பீதர்: கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொன்ற மனைவி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.பீதர் அலியாம்பரா கிராமத்தில் வசித்தவர் அமித், 37. கடந்த நவம்பர் 11 ம் தேதி, கிராமத்தின் ஒதுக்குபுறமான பகுதியில் இறந்து கிடந்தார். அருகில் அவரது பைக்கும், சேதம் அடைந்த நிலையில் கிடந்தது. விபத்தில் இறந்ததாக அலியாம்பரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் சாவில் சந்தேகம் இருப்பதாக, உறவினர்கள் புகார் அளித்தனர்.அமித் இறந்து கிடந்த இடத்தில் பதிவாகி இருந்த, மொபைல் போன் டவரை வைத்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிக்கந்தர், 35, வெங்கட், 37, ஆகாஷ், 28 ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். அவர்கள் அமித்தை கொன்றதை ஒப்புக்கொண்டனர். ரவி பாட்டீல், 33 என்பவர் பணம் கொடுத்ததால், கொலை செய்ததாக கூறினர்.இதையடுத்து ரவி பாட்டீலும் கைது செய்யப்பட்டார். இவருக்கும், அமித்தின் மனைவி சைத்ரா, 32 வுக்கும் கள்ளக்காதல் இருந்தது. இதுபற்றி அறிந்த அமித், கள்ளக்காதலை கண்டித்து உள்ளார். இதனால் அமித்தை தீர்த்துக்கட்டியது தெரிந்தது. இதற்கு சைத்ராவுக்கு உடந்தையாக இருந்தது தெரிந்ததால், அவரும் நேற்று கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

tamilan
ஜன 04, 2024 10:45

உலகம் அழியும் காலம் விரைவில் வரும் போல தோன்றுகிறது. நாளுக்கு நாள் மக்கள் செய்யும் பாவங்கள் அதிகரித்து கொண்டே போகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற சொல்லே இல்லாமல் போனது.ஆண்களும் பெண்களும் காமம் தலைக்கேறி ஆட்டம் போடுகின்றனர்.


duruvasar
ஜன 03, 2024 15:13

அதர்மத்திற்கு வக்காலத்து வாங்கி வாதாட நாட்டில் நிறைய கபில்சிபல்கள் உண்டு.


Nallavan
ஜன 02, 2024 17:01

நண்பரே.. கொலை செய்தவர்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு வாதாட வக்கீல்களும், ஜாமீன் கொடுக்க நீதி மான்களும் இருக்கும் வரை, இந்த கொலைகள் நடக்கும். நாடும் நாசமா போகும்.


chandran
ஜன 02, 2024 15:48

நாடு மட்டும் இல்ல. இந்த உலகமே அழிஞ்சு மீண்டும் புதிதாக உருவாக வேண்டும்.


Sivak
ஜன 02, 2024 12:50

இந்த செய்திக்கு ஒரு கமெண்டும் இல்லாமல் பலரும் கடந்து போயிருக்கின்றனர் ... ஒரு பெண் கொலை செய்யப்பட்டால் ஊரே ஒன்று திரண்டு ஒப்பாரி வைக்கும்... இங்கு ஒரு ஆண் எந்த தவறும் செய்யாமல் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார் .. அதுவும் இந்த மாதிரி கள்ளக்காதல் கொலைகள் தினம் ஒரு செய்தியாக வந்து கொண்டிருக்கிறது .... சமூகம் எங்கு போய்க்கொண்டிருக்கிறது ...?


santhanam
ஜன 02, 2024 13:38

நாடு....நாசமா....போகட்டும்...


பெரிய ராசு
ஜன 04, 2024 17:13

எவனும் கேட்க மாட்டாங்க திராவிடிய மாடல்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை