உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆதித்யா-எல்1 விண்கலம் இன்று எல்-1 புள்ளியை அடைகிறது: விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பு

ஆதித்யா-எல்1 விண்கலம் இன்று எல்-1 புள்ளியை அடைகிறது: விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பு

பெங்களூரு: ஆதித்யா எல்-1 விண்கலம் இன்று(ஜன.,06) மாலை 4 மணிக்கு எல்-1 புள்ளியை அடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார். மேலும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.சூரியனை ஆய்வு செய்ய, கடந்த செப்., 2ல், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை, இஸ்ரோ விண்ணில் ஏவியது. பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ., துாரம், 125 நாட்கள் பயணித்து, சூரியனுக்கு அருகில் உள்ள, எல் 1 எனப்படும், லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

இறுதிக் கட்டத்தில் ஆதித்யா எல்-1விண்கலம்

இந்நிலையில் இன்று(ஜன.,06) மாலை 4 மணிக்கு எல்-1 புள்ளியை ஆதித்யா எல்-1 விண்கலம் அடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியிருப்பதாவது: சூரியனின் செயல்பாடுகளையும், வானிலையில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் ஆதித்யா எல்-1 விண்கலம் ஆய்வு செய்யும். விண்கலத்தில் உள்ள 7 சாதனங்கள், இந்த ஆய்வில் ஈடுபடும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

vijayaraj
ஜன 06, 2024 11:59

எல்லா விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள். மேலும் சாதனைகள் பல தொடர வாழ்த்துக்கள்.


raja
ஜன 06, 2024 08:29

வாழ்த்துக்கள்.... சப்போர்டருக்கு ஜெல்லுசில் பார்சல் ...


Ramesh Sargam
ஜன 06, 2024 07:28

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். சாதனை தொடரவேண்டும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை