| ADDED : பிப் 29, 2024 11:17 PM
ராம்நகர்: “டாக்டர் மஞ்சுநாத்தை அரசியலுக்கு அழைத்து வந்து, பலிகடாவாக்க முயற்சி செய்கின்றனர்,” என, ம.ஜ.த., தலைவர்கள் மீது, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா குற்றஞ்சாட்டி உள்ளார்.ராம்நகர் மாகடியில் நேற்று அவர் அளித்த பேட்டி:கர்நாடகாவில் ம.ஜ.த., மாநில கட்சியாக உள்ளது. அந்த கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா பிரதமராக இருந்தவர். அவரது மகன் குமாரசாமி, முதல்வராக இருந்தவர். ஆனாலும் தேவகவுடாவுக்கு, தனது மருமகன் டாக்டர் மஞ்சுநாத்தை, ம.ஜ.த., வேட்பாளராக அறிவிக்கும் தைரியம் இல்லை. அவரை பா.ஜ., வேட்பாளராக தள்ளிவிட பார்க்கின்றனர்.இதன்மூலம் அவரை பலிகடாவாக்க முயற்சி செய்கின்றனர். மஞ்சுநாத் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.காங்கிரஸ் எம்.பி., சுரேஷை எதிர்கொள்ள முடியாமல், குமாரசாமி திணறி வருகிறார். இதனால் மாண்டியாவுக்கு ஓட நினைக்கிறார்.லோக்சபா தேர்தலில் சுரேஷ் தோற்றால், பெங்களூரு ரூரல் மக்களுக்கு இழப்பு. முன்னாள் அமைச்சர் யோகேஸ்வர், பா.ஜ., கூட்டணி வேட்பாளராக, பெங்களூரு ரூரலில் போட்டியிட நினைக்கிறார். ஆனால் அவருக்கு 'சீட்' கிடைக்காது.இவ்வாறு அவர் கூறினார்.