உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேட்டியுடன் வந்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு: மால்-ஐ மூட உத்தரவு

வேட்டியுடன் வந்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு: மால்-ஐ மூட உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பெங்களூரில் வேட்டி, தலைப்பாகை அணிந்து வந்ததால் மாலுக்குள் நுழைய விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மால்-ஐ ஒரு வாரத்திற்கு மூட கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி பக்கீரப்பா, (வயது 65). இவரது மகன் நாகராஜ், (வயது 35). பெங்களூரு விஜயநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் நாகராஜ் வேலை செய்து வருகிறார். மகனை பார்ப்பதற்காக பக்கீரப்பா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெங்களூரு வந்தார். ஜி.டி., மாலுக்கு பக்கீரப்பாவை, நாகராஜ் கல்கி படம் பார்ப்பதற்கு அழைத்துச் சென்றார். பக்கீரப்பா வேட்டி, சட்டை அணிந்து, தலைப்பாகை கட்டியிருந்தார். மால் செக்யூரிட்டி, பக்கீரப்பாவை வாயிலில் தடுத்து நிறுத்தினார். வேட்டி, தலைப்பாகை அணிந்து கொண்டு மாலுக்குள் செல்ல அனுமதி இல்லை என்றார். இதனால் அதிர்ச்சியடைந்த நாகராஜ் செக்யூரிட்டியிடம் வாக்குவாதம் செய்தார். இது பற்றி அறிந்ததும் சில ஊடகத்தினர் அங்கு சென்றனர். இதனால் வேறு வழி இன்றி பக்கீரப்பா மாலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். விவசாயி என்பதால் பக்கீரப்பா அவமதிக்கப்பட்டதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. கன்னட அமைப்பினர் மால் முன்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று (ஜூலை18) மால்-ஐ ஒரு வாரத்திற்கு மூட கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Selva Kumar
ஜூலை 20, 2024 09:54

அருமையான தீர்ப்பு


Sivaprakasam Chinnayan
ஜூலை 19, 2024 21:46

சரியான விமர்சனம்


VETRI SELVAN
ஜூலை 19, 2024 13:45

சூப்பர் வாழ்த்துக்கள்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 19, 2024 10:20

பிகினி உடையில் வந்தால் அனைத்து மால்களிலும் அனுமதி உண்டு.


Anbuselvan
ஜூலை 18, 2024 23:25

இது முதுகெலும்புள்ளவர்கள் செய்யும் செயல். இதுவே சென்னையில் ஒரு நீதிபதியையே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உள்ளே அனுமதிக்க வில்லை. ஆனால் இங்கே முதுகெலும்பு சுத்தமாக இல்லை.


Venkatasubramanian krishnamurthy
ஜூலை 18, 2024 20:54

இந்தியாவில் வேட்டி அணிந்து வருவது குற்றமா? இதே பெங்களூருவில் முதல்வர் சித்தராமையேவோ, துணை முதல்வர் சிவகுமாரோ அவர்களுடைய வழக்கமான உடையான வேட்டியோடு வந்தால் தடுத்திருப்பார்களா?


Matt P
ஜூலை 18, 2024 20:29

இங்கு எப்படி துணி அணிந்தாலும் குறையாக பார்ப்பதில்லை. வித்தியாசமாக இருக்கிறதே என்று ஆச்சரியமாக பார்ப்பார்கள். ஒரு தமிழக அதிமுக அமைச்சர் நியூயார்க் வந்தபோது வேஷ்டி சட்டையில் உலா வந்தபோது இங்குள்ள சிலர் அவரிடம் படம் எடுத்து கொண்டார்கள். தினமலரின் தான் படித்தேன். கிழியாத சுத்தமான துணியை அணிய வேண்டும். அது தான் தேவை. மத்திய கிழக்கு நாட்டில் இருந்து வரும் ஆட்சியாளர்கள் வெள்ளை மாளிகை செல்லும்போது அவர்களுடைய பாரம்பரிய உடையில் வேஷ்டி போலவும் தலைப்பாகட்டு போலவும் தான் அணிந்து செல்கிறார்கள்.


S. Narayanan
ஜூலை 18, 2024 19:35

இது கண்டு யாரும் சூப்பர் அரசு என்று நினைக்க வேண்டாம். கர்நாடக அரசிடம் பணம் இல்லை. 5 கோடி பணம் கொடுத்தால் மால் திறக்க முடியும்


Naresh Kumar
ஜூலை 18, 2024 19:04

மிக அருமை.


தாமரை மலர்கிறது
ஜூலை 18, 2024 18:51

இதற்காக மாலை ஒருவாரம் மூடிவிட்டால், அந்த மாலில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு ஒரு வாரம் சம்பளம் கிடையாது. பிசினஸ் ஓனர்களுக்கு ஒரு வாரம் பிசினஸ் இல்லை. இதுபோன்ற முட்டாள்தனமான செயல்களை அரசு செய்தால், நாடு கம்யூனிஸ்ட் நாடாகி ஒரு முதலீடும் வராது. வேஷ்டி அணிந்துவந்தாலும் அனுமதிக்க வேண்டும். மறுத்தால், ஒரு லட்சம் ரூபாய் மால் ஓனர் கட்ட வேண்டும் என்று அரசு நிர்ணயிக்கவேண்டும். அதைவிட்டு மக்களை போன்று உணர்ச்சிவசப்பட்டு காங்கிரஸ் அரசு சிந்திப்பது முதலீட்டாளர்களை மாநிலத்தை விட்டு வெளியே தள்ளும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை