உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாபில் பா.ஜ., தனித்துப் போட்டி

பஞ்சாபில் பா.ஜ., தனித்துப் போட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பஞ்சாபில் பா.ஜ., தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.லோக்சபாவுக்கு ஏழு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாபில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஜூன் 1ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ‛ இண்டியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இங்கு தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்து உள்ளன.அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து பா.ஜ., ஆலோசித்து வந்ததாகவும், அது தொடர்பாக இரு கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தகவல் வெளியானது.இந்நிலையில், பஞ்சாபில் தனித்துப் போட்டியிடப் போவதாக பா.ஜ., மாநில தலைவர் சுனில் ஜக்கார் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை