உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மொபைல் போன் லொகேஷன் வசதியை செயல்பாட்டிலேயே வைக்க மத்திய அரசு திட்டம்: ஆப்பிள் - சாம்சங் நிறுவனம் எதிர்ப்பு

மொபைல் போன் லொகேஷன் வசதியை செயல்பாட்டிலேயே வைக்க மத்திய அரசு திட்டம்: ஆப்பிள் - சாம்சங் நிறுவனம் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'மொபைல் போன் லொகேஷன் டிராக்கிங்' எனப்படும் இருப்பிட கண்காணிப்பு முறையை, எப்போதும் செயல்பாட்டில் வைத்திருப்பதை கட்டாயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.'ரிலையன்ஸ் ஜியோ' மற்றும் 'ஏர்டெல்' உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அங்கம் வகிக்கும், 'செல்லுலார் ஆப்பரேட்டர்கள் இந்தியா' சங்கத்தின் சார்பில் மத்திய அரசுக்கு ஒரு யோசனை முன் மொழியப்பட்டுள்ளது.விசாரணை அது தற்போது சர்ச்சையாகியுள்ளது. அவர்கள் முன்வைத்த யோசனையில், 'போலீஸ், சி.பி.ஐ., போன்ற நாட்டின் விசாரணை அமைப்புகள், மொபைல் போன் பயனர்களின் இருப்பிடம் கோரி சட்ட ரீதியாக மொபைல்போன் ஆப்பரேட்டர்களை அணுகுகின்றனர்.அப்போது துல்லியமான இருப்பிடத்தை வழங்க முடிவதில்லை.'தற் போது மொபைல் போன் பயனர்களின் சிம் கார்டு கடைசியா க எந்த டவர்களை பயன்படுத்தியதோ அந்த தரவுகளின் அடிப்படையிலேயே பொதுவான இருப்பிடம் கிடைக்கிறது.'செயற்கைக்கோள் தரவு மற்றும் மொபைல் போனின் இணைய வசதி இரண்டையும் பயன்படுத்தி துல்லியமான இருப்பிடத்தை கண்டறிய முடியும்.'எனவே அனைத்து மொபைல் போன்களிலும் இந்த இருப்பிட வசதி செயல்பாட்டிலேயே இருக்கச் செய்வதை கட்டாயமாக்க வேண்டும். மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இதற்கான உத்தரவை வழங்க வேண்டும்' என கூறியுள்ளனர்.குற்றச்சாட்டு இதை மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதை, 'ஆப்பிள்' மற்றும் 'சாம்சங்' நிறுவனங்கள் உறுப்பினராக உள்ள இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது.இது தொடர்பாக மத்திய அரசுக்கு அச்சங்கம் எழுதிய கடிதத்தின் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.அதில், 'செல்லுலார் ஆப்பரேட்டர்களின் யோசனையை செயல்படுத்தினால், அது உலகின் எங்கும் இல்லாத மிகை கண்காணிப்பு முறையாக மாறிவிடும்.'ராணுவம், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் போன்ற முக்கிய நபர்களின் பாதுகாப்பு ஆபத்துக்கு உள்ளாகும்' என, எச்சரித்து உள்ளது.சமீபத்தில் நாட்டில் விற்பனையாகும் அனைத்து, 'ஸ்மார்ட்போன்'களிலும், 'சஞ்சார் சாத்தி' எனும் செயலியை கட்டாயம் நிறுவி இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.இந்த செயலி, திருடு போன மொபைல் போன்களை கண்டறியவும், ஆன்லைன் சைபர் குற்ற மோசடிகளை தடுக்கும் நோக்கத்திலும் உருவாக்கப் பட்டது.இதை கட்டாயமாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க் கட்சியினர், மக்களை உளவு பார்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என குற்றஞ்சாட்டினர். இந்த சர்ச்சையால் 'சஞ்சார் சாத்தி' கட்டாயம் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை