உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசின் நடவடிக்கையில் உடன்பாடில்லை: எதிர்ப்பு காட்டும் எக்ஸ் நிறுவனம்

அரசின் நடவடிக்கையில் உடன்பாடில்லை: எதிர்ப்பு காட்டும் எக்ஸ் நிறுவனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி :விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புடைய சமூக வலைதள கணக்குகளை தற்காலிகமாக முடக்கும்படி மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் உடன்பாடில்லை என, 'எக்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், நம் நாட்டில், ஜனநாயக படுகொலை நடப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசத்தில் இருந்து டில்லி நோக்கி விவசாயிகள் நடத்தி வரும் பேரணியுடன் தொடர்புடைய 177 சமூக வலைதள கணக்குகளை தற்காலிகமாக முடக்கும்படி, 'எக்ஸ்' நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து, 'எக்ஸ்' நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன் விபரம்:சில குறிப்பிட்ட எக்ஸ் கணக்குகளை தற்காலிகமாக முடக்கும்படி மத்திய அரசு எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த உத்தரவுக்கு மதிப்பளித்து, அந்த கணக்குகளை இந்தியாவில் மட்டும் முடக்கி உள்ளோம். மத்திய அரசின் நடவடிக்கையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அந்த பதிவுகளுக்கும் கருத்து சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அரசின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு அளித்து இருப்பதால் அது குறித்து மேற்கொண்டு பேச முடியவில்லை. அந்த உத்தரவின் நகலையும் வெளியிட முடியவில்லை. தன்னிச்சையான முடிவு ஆனால் அவற்றை வெளியிடுவது அவசியம் என கருதுகிறோம். இல்லாவிட்டால் தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்படுவதை தடுக்க முடியாது.இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.எக்ஸ் நிறுவனத்தின் இந்த அறிக்கையை தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காங்., பொது செயலர் ஜெய்ராம் ரமேஷ், நாட்டில் ஜனநாயக படுகொலை நிகழ்ந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Parthasarathy Badrinarayanan
பிப் 23, 2024 10:56

கூலி இவர்களுக்கும் கொடுத்துவிட்டனர் போல் உள்ளது. அதனால்தான் தடை செய்ய மறுக்கிறார்கள். இந்தியாவில் X இணையத்தையே தடை செய்ய வேண்டும்


R Kay
பிப் 23, 2024 07:08

இந்தியாவில் இந்த இணையதளத்தை தடை செய்ய வேண்டும்.‌ அந்நிய சக்திகளின் கைக்கூலிகள் எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் தலைநகரையே ஸ்தம்பிக்க செய்யும் முயற்சியையும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதை ஒருக்காலும் அனுமதிக்க இயலாது. அதிலும் இந்த பசுத்தோல் போர்த்திய புலிகள் தேர்ந்தெடுத்த நேரத்தை பாருங்கள். அரசு விடை பெறும் நேரத்தில் கோரிக்கை.‌ எதையாவது செய்து ஆட்சிக்கு களங்கம் விளைவிக்க முயற்சி. மம்தா. உண்டியல் குலுக்கிகள், ஐஐடி‌ மாமேதை, மாஃபியா குடும்ப கட்சிகளுக்கு எங்கள் மோடிஜி ஆயிரம் மடங்கு மேல். எதிரிகள் மண்ணைக் கவ்வுவார்கள்


Sriram V
பிப் 23, 2024 04:13

Farmers protest is coordinated by corrupt congies and soros backed AAP. There's nothing wrong in locking this illegal Audi car owned farmers


MARUTHU PANDIAR
பிப் 23, 2024 02:58

அந்த நிறுவனம் இந்த நிறுவனம் என்று சொல்லிக் கொண்டு இங்கே கலக்கம் புரியும் இவனுவலை சட்னியாக்க வேண்டும்.


Sathyasekaren Sathyanarayanana
பிப் 22, 2024 22:57

இன்னுமா இவர்கள் விவசாயிகள் என்று மக்களை நம்பவைக்க நினைக்கிறார்கள்?


Priyan Vadanad
பிப் 22, 2024 22:51

செய்திகளை இருட்டடிப்பு செய்து மூடி அரசு செயல்படுவது நல்லதல்ல. இது காற்று குமிழிகளை சேறு தனக்குள் அடக்கி வைத்திருப்பது போல இருக்கிறது. எத்தனை காலம். உண்மை என்னும் காற்று குமிழி வெளிவரும் அப்போது நியாயமான ஆட்சி மலரும்.


Priyan Vadanad
பிப் 22, 2024 22:47

தினமலர் இந்த செய்திகளை வெளியிடுவது மிகவும் பாராட்டத்தக்க செயல். இதுபோல எல்லா பிரச்சினைகளையும் மூடி மறைத்து அரசு செயல்படுவது நல்லதல்ல. முந்தைய அரசு இந்த மாதிரியான விஷயத்தில் தவறு செய்திருந்தாலும், இன்றைய அரசு அதிகமாகவே தவறு செய்கிறது. செய்திகளை இருட்டடிப்பு செய்து மூடி அரசு செயல்படுவது நல்லதல்ல.


Priyan Vadanad
பிப் 22, 2024 22:39

எப்படி எங்கள் அரசு என்பது இப்பவாவது புரியுதா? நடிகர் கிஷோர் சமூக வலைதளத்தில் டில்லியில் போராடும் விவசாயிகள் பற்றி பதிந்துள்ள செய்தியும் வலம் வருகிறது.


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி