உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., வங்கி கணக்கு முடக்கப்பட்டு விடுவிப்பு

காங்., வங்கி கணக்கு முடக்கப்பட்டு விடுவிப்பு

கடந்த 2018 - 19ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்த காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை, வருமான வரித்துறை நேற்று அதிரடியாக முடக்கியது. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இது போன்ற நடவடிக்கையால், அன்றாடச் செலவுகளுக்கே பணமில்லாத நிலை உருவாகி உள்ளதாக அக்கட்சித் தலைவர்கள் கதறினர். வருமான வரி முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகி முறையிட்ட பின், நிபந்தனையுடன் வங்கி கணக்கை தற்காலிகமாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. வரும் 21ல் இது தொடர்பான விசாரணை நடக்க உள்ளது. தேர்தல் பத்திர விற்பனை திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் அதிரடி தீர்ப்பை அளித்தது. இதற்கு மறுநாளான நேற்று, காங்கிரஸ்கட்சிக்கு பேரதிர்ச்சிகாத்திருந்தது.அக்கட்சியின் அனைத்து வங்கி கணக்குகளும்முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின.இது குறித்து, காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மாகன் நேற்று செய்தியாளர்களி டம்கூறியதாவது:கட்சி கணக்கில் இருந்து நாங்கள் அளிக்கும் காசோலைகள் திரும்பி வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விசாரித்த போது, காங்கிரஸ் கட்சி மற்றும் இளைஞர் காங்கிரசின் நான்கு முக்கிய வங்கி கணக்குகள், வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்தது.கடந்த 2018 -- 19 தேர்தல் நடந்த ஆண்டு என்பதால், அந்த ஆண்டுக்கான வருமான வரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்தோம். இதற்காக, 210 கோடி ரூபாய்அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கட்சிஎம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் தங்கள் சம்பளத் தொகையில் இருந்து, 14.4 லட்சம் ரூபாயைகட்சிக்கு ரொக்கமாக நன்கொடை அளித்தனர். இதில் முரண்பாடு இருப்பதாகக் கூறி, எங்கள் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கி உள்ளது.தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம், பணியாளர்களுக்கான சம்பளம் செலுத்தக்கூட கட்சியில் பணம் இல்லை. மக்களிடம் இருந்து பெறப்பட்ட நன்கொடை பணத்தை வைத்துள்ள வங்கி கணக்கை கூட எங்களால் பயன்படுத்த முடியவில்லை. ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை மட்டுமின்றி, கட்சி நடவடிக்கைகளுக்கு கூட பணம் இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஜனநாயகத்திற்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் தலைவர்கள், வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகினர். காங்.,கைச் சேர்ந்த விவேக் தன்கா, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன் ஆஜராகி மனு அளித்தார். அதை பரிசீலித்த தீர்ப்பாயம், முடக்கப்பட்ட காங்., வங்கி கணக்குகளை தற்காலிகமாக விடுவித்தது. வரும் 21ல், இது தொடர்பான விசாரணை நடத்தப்படும் என்றும், அதுவரை வங்கி கணக்கில் 115 கோடி ரூபாய் இருப்பு இருக்க வேண்டும் என்றும், அதற்கு மேல் உள்ள பணத்தை செலவு செய்து கொள்ள அனுமதி அளிப்பதாக தெரிவித்தது. ஆனால், வங்கி கணக்கில் 115 கோடி ரூபாய் அளவுக்கு பணம் இல்லை என காங்., தரப்பு தெரிவிக்கிறது. இது குறித்து, காங்., - எம்.பி., ராகுல் கூறியதாவது:பண பலத்தைக் காட்டிலும், மக்கள் பலத்தைக் கொண்டது தான் காங்கிரஸ். சர்வாதிகார நடவடிக்கைக்கு முன், நாங்கள் எப்போதும் தலை வணங்கியதில்லை; இனிமேலும் தலை வணங்க மாட்டோம். ஜனநாயகத்தை காப்பாற்ற, காங்கிரசின் ஒவ்வொரு தொண்டனும் போராடப்போவது நிச்சயம்.இவ்வாறு அவர் கூறினார்.பொய் பேசுவதை நிறுத்துங்கள்!காங்கிரஸ் கட்சியினர் வருமான வரித்துறையின் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை. இதற்காக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதைத் தான் வருமான வரித்துறை தற்போது எடுத்துள்ளது. இதில், பா.ஜ., தலையீடு எதுவும் இல்லை. பிரச்னையை திசை திருப்புவதற்காக காங்கிரஸ் கட்சியினர் அவதுாறுகளையும், பொய்களையும் அள்ளி விடுவது கண்டனத்துக்குரியது. ரவிசங்கர் பிரசாத் முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,

'ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்!'

காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:அதிகார போதையில் திளைக்கும் அரசு, காங்கிரசின் வங்கி கணக்கை முடக்குகிறது. இது, ஜனநாயகத்தின் மீது நிகழ்த்தப்பட்டுள்ள மிகப்பெரிய தாக்குதல். சட்டத்திற்கு புறம்பான வழியில் வசூலிக்கப்பட்ட நிதியை, பா.ஜ., தேர்தலுக்கு செலவழிக்கிறது. அதே நேரம், 'கிரவுட் பண்டிங்' வாயிலாக மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட எங்கள் பணம் முடக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Kanns
பிப் 17, 2024 14:15

All Parties' Public Fundings are Looted/ Black Money Recoming as White Money for Corrupting Voters


A1Suresh
பிப் 17, 2024 13:19

"கான் கிராஸ்" கட்சிப் பணம் டெல்லி-ஹரியானாவில் போராடும் காலிஸ்தான் போலி விவசாயிகளுக்கு செல்வதாக செய்தி. ஆறு மாதங்களுக்கு பல்லாயிரம் போலி-விவசாயிகளுக்கு உணவு, உடை, இருப்பிடம், வண்டிகள், டீஸல், கேளிக்கை வசதிகள் இத்யாதிகளுக்கு செலவாகிறது. வெளிநாடுகளிடமிருந்தும் பணம் கொட்டுகிறது. புதுப்புது டிராக்டர்கள் ,வாகனங்கள் வாங்க ஏது பணம் ?


Sridhar
பிப் 17, 2024 12:59

இப்போக்கு மிகவும் அபாயகரமானது. வரும் காலங்களில் எந்த ஒரு குற்றவாளியும் குற்றத்தை செய்துவிட்டு, அதற்கான தண்டனை வரும் பொழுது பழிவாங்குகிறார்கள், மனித உரிமை மீறல் என்று பலவித கோஷங்களை எழுப்பி அரசு இயந்திரங்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிடமுடியும். வருமான வரி அறிக்கைகள் தாக்கல் செய்யாமலும் 100 கோடிக்கு மேல் வரி கட்டாமலும் இருந்தது பழம்பெரும் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் செய்த சட்டவிரோத செயல். உரிய நேரம் அளித்தும் வரிகட்டாமல் போக்குக்காட்டியது மிகவும் கேவலமான செயல். வேறெந்த குடிமகனும் இவ்வாறு செய்திருந்தால் மேல்முறையீடு செய்தாலும் முடக்கிய வங்கிக்கணக்குகள் அப்படியேதான் இருந்திருக்கும். அரசியல் கட்சியாக இருப்பதால் சலுகை அளித்து ஒரே நாளில் முடங்கிய கணக்குகளை மீண்டும் திறக்க அனுமதி அளித்திருக்கிறார்கள். ஒரு கேவலமான தவறை செய்துவிட்டு எப்படித்தான் இவர்களால் தலையை நிமிர்த்திக்கொண்டு அரசியல் செய்யமுடிகிறதோ விசாரணை கைதியாக பெயிலில் இருந்துகொண்டே பாதயாத்திரை செல்ல முடித்தவர்களுக்கு இதென்ன பிரமாதம்


பேசும் தமிழன்
பிப் 17, 2024 10:59

கான் கிராஸ் கட்சியிடம் பணம் இல்லையா.... கேட்பவன் கேனையன் என்றால்.. கேப்பையில் நெய் வடிகிறது எ‌ன்று‌ கூறுவார்கள்... அது போல் உங்களிடம் இருக்கும் ஊழல் பணத்தை வைத்து உலகத்துக்கே பட்ஜெட் போடலாம் எ‌ன்று கூறுகிறார்களே...


Krishna Gurumoorthy
பிப் 17, 2024 09:56

வங்கி கணக்கில் பணம் இல்லை எப்படி இருக்கும்?? இளவரசன் கணக்கில் எல்லாம் சேர்த்து வைத்து கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு நாமம் போட்டு விடுவார்கள்


Balasubramanian
பிப் 17, 2024 09:54

இளவரசர் நடை பயணத்திற்கே ரூ 100 கோடி செலவாகிறது


vbs manian
பிப் 17, 2024 09:54

என்ன பணம் இல்லையா. யார் நம்புவார். சாப்பிட்டதெல்லாம் எங்கே போயிற்று.


GMM
பிப் 17, 2024 09:27

காங்கிரஸ் கட்சி MLA, MP சம்பள பணம் 14.4 லட்சம் கட்சிக்கு ரொக்கமாக நன்கொடை. சம்பளம் கட்சிக்கு நன்கொடை என்றால், குடும்பம் நடத்த பணம்? ஏன் வங்கி மூலம் பரிவர்த்தனை இல்லை. கட்சி கறுப்பு பணம் கொண்டு மட்டும் நடத்த முடியாது. தேர்தல் பத்திரம் அவசியம். காங்கிரஸ், திமுக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.


ஆரூர் ரங்
பிப் 17, 2024 09:01

காங்கிரஸின் முக்கிய தலைவராக இருந்த மூத்த அமைச்சர் ஜெகஜீவன்ராம் பத்தாண்டுகளாக வருமான வரி கட்டவில்லை????. பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பப்பட்ட போது ஆமாம் வரி கட்ட மறந்து விட்டேன் என்றார். அரசும் உடனடியாக மன்னித்து விட்டது. இப்போது கட்சியே மறந்து விட்டது.


karunamoorthi Karuna
பிப் 17, 2024 08:49

சாதாரண அரசு ஊழியர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வில்லை என்றால் ஊதியம் கிடைக்காது ஆனால் அரசியல் கட்சிகள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வில்லை என்றால் கணக்கை முடக்கி வைப்பதில் என்ன தவறு அரசு ஊழியர்களுக்கு ஒரு சட்டம் அரசியல் கட்சிகளுக்கு ஒரு சட்டமா


Barakat Ali
பிப் 17, 2024 08:58

ஜனநாயகம் இந்தியாவில் பெயரளவில் தான் உள்ளது ......


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி