உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர் நலனுக்காக பாடுபடும் காங்.,: ராகுல் பெருமிதம்

ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர் நலனுக்காக பாடுபடும் காங்.,: ராகுல் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: 'ஏழைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக பாடுபடும் காங்., அரசு தெலுங்கானாவில் ஆட்சியில் உள்ளது' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறினார். தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: இன்று நாட்டில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே சண்டை நடக்கிறது. ஒரு பக்கம் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ் உள்ளது. இன்னொரு பக்கம் அரசியலமைப்பு சட்டத்தை அழிக்கும் முயற்சியில் பா.ஜ., களம் இறங்கி உள்ளது. நாங்கள் வெற்றி பெற்றால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என பா.ஜ., தலைவர்கள் கூறி வருகின்றனர். பழங்குடியினர் முன்னேறக் கூடாது என்று பா.ஜ., விரும்புகிறது.

வருமானம் இரட்டிப்பு

கோடீஸ்வரர்களின் ரூ.16 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை நரேந்திர மோடி தள்ளுபடி செய்துள்ளார். ஏழைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக பாடுபடும் அரசு தெலுங்கானாவில் ஆட்சியில் உள்ளது. அதேபோல் மத்தியிலும் ஆட்சி அமைய வேண்டும். நீர், காடுகள் மற்றும் நிலங்களை நாங்கள் பாதுகாப்போம். 100 நாள் வேலை திட்டத்தில், ஒரு நாள் ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்துவோம். அங்கன்வாடி பணியாளர்களின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்.

உத்தரவாதம்

தெலுங்கானாவில் அனைத்து உத்தரவாதங்களையும் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது. இப்போது நாடு முழுவதும் எங்களது உத்தரவாதங்களை நிறைவேற்றுவோம். ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்யப்படும். நாட்டின் ஒவ்வொரு படித்த இளைஞருக்கும் ரூ.1 லட்சம் மதிப்பிலான தொழிற்பயிற்சிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

பேசும் தமிழன்
மே 06, 2024 13:13

பப்பு ..... பொய் சொல்லலாம்....ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்ல கூடாது.


krishnamurthy
மே 06, 2024 12:19

இவரால் மட்டும்தான் இப்படி முழுதாக பொய் சொல்ல முடியும்


ஆரூர் ரங்
மே 05, 2024 22:18

ஆனால் காங்கிரசுக்காக நாற்பது ஆண்டுகளுக்கு மேல் உழைத்த பட்டியலினத் தலைவர் ஜெகஜீவன்ராம் அவர்களை பிரதமராக ஆக்க விடாமல் தடுத்தது உங்க கட்சியின் வெறுப்பு அரசியல்.


pandit
மே 05, 2024 22:03

கொள்ளு தாத்தா ,பாட்டி, அப்பா எல்லோரும் இதே உருட்டு


மோகனசுந்தரம்
மே 05, 2024 21:22

இவருக்கு சிறுபான்மையினர் ஓட்டு மட்டும் போதவில்லை. எப்படியாவது ஹிந்து சமுதாயத்தை பிரித்து அதில் ஒரு பகுதியை ஆட்டையை போடலாம் என்று நினைக்கிறான். அப்பொழுதுதான் ஜெயிக்க முடியும்.


Dharmavaan
மே 05, 2024 19:46

இவன் அடிக்கும் கொள்ளை திருட்டு முஸ்லீம் பாகுபாடு ஹிந்து விரோதம் தவிர மீதியை பேசுகிறான்


குமரி குருவி
மே 05, 2024 19:19

நீ யாருக்கு பாடுபடுறே எதற்கு பாடுபடுறே எல்லாம் மக்கள் தெரிந்து கொண்டால் காங்கிரஸ் கட்சியை வெறுக்கிறார்கள் முக்கியமாக பப்புவாகிய உன்னையும்..


Godfather_Senior
மே 05, 2024 18:21

ஆமாங்க, திரௌபதி அம்மையாருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்காம எதிர்த்து போட்டி வச்சதே உங்கள் பழங்குடி இனத்தவர் பாசத்தை காட்டிடுச்சே


Lion Drsekar
மே 05, 2024 17:33

வரி கட்டுபவர்கள் என்ற ஒரு இனம் இருப்பதால்தான் நீங்கள் இந்த அளவுக்கு இராஜ வாழ்வு வாழ்கிறீர்கள் பதவி இல்லையென்றாலும் உங்கள் தாத்தா காலங்களில் எப்படி வாழ்ந்தீர்களோ அதே பாதுகாப்பு, அதே ராஜ வாழ்க்கை, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அதே பாதுகாப்பு ? யாராவது ஒருவர் கேள்வி கேட்டிருப்பார்களா ? கேட்கத்தான் முடியுமா ? அப்படி இருக்க ஒரு நாள் எந்த ஒரு அரசியல் காட்சியாவது உங்களால்தான் நாங்கள் ஏழைகளுக்கு உதவுகிறோம் என்று கூறியிருப்பீர்களா ? ஆகவே தாங்கள் செய்யும் , பேச்சுக்கும் நடுவில் இந்த நாட்டில் உங்கள் வாழ்வாதாரத்துக்கு வித்திட்டு இன்றுவரை பாதுகாக்கும் வரிகட்டுபவர்கள் அனைவர்களின் சார்பாக நாங்கள் பாடுபடுவோம் என்று கூறுங்கள் வந்தே மாதரம்


வாய்மையே வெல்லும்
மே 05, 2024 16:56

எவரும் நம்ப மாட்டார்கள்,, வேறு எதாவது யோசிச்சு விளையாட்டு காட்டுங்க


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை