உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் விபத்தில் சதியா?: வெடி சத்தம் கேட்டதாக டிரைவர் வாக்குமூலம்

சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் விபத்தில் சதியா?: வெடி சத்தம் கேட்டதாக டிரைவர் வாக்குமூலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோண்டா: சண்டிகரில் இருந்து அசாமின் திப்ருகர் நோக்கி சென்று கொண்டிருந்த பயணியர் ரயிலின் எட்டு பெட்டிகள், உத்தர பிரதேசத்தின் கோண்டா அருகே நேற்று தடம் புரண்டன. இதில் இருவர் உயிரிழந்தார்; 35 பேர் காயம் அடைந்தனர். ரயில் தடம் புரள்வதற்கு முன், வெடி சத்தம் கேட்டதாக ரயில் டிரைவர் தெரிவித்தார். இதில், நாசவேலை ஏதும் உள்ளதா என, ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.யூனியன் பிரதேசமான சண்டிகரில் இருந்து, அசாமின் திப்ருகர் நோக்கி, சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. உத்தர பிரதேசத்தின் லக்னோவில் இருந்து 150 கி.மீ., தொலைவில் உள்ள கோண்டா சந்திப்பு அருகே நேற்று மதியம் 2:37 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது, திடீரென ரயில் தடம் புரண்டது. மொத்தமுள்ள 23 பெட்டிகளில் எட்டு பெட்டிகள் தடம் புரண்டன. சில பெட்டிகள் பக்கவாட்டில் கவிழ்ந்தன. அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளித்தது. பயணியர் அதிர்ச்சியில் கதறினர். அந்த இடமே களேபரமாக காட்சி அளித்தது. உயிரிழந்தோர் எண்ணிக்கையில் முதலில் குழப்பம் நிலவியது. உ.பி., துணை முதல்வர் பிரஜேஷ் பதக் கூறுகையில், நான்கு பயணியர் உயிரிழந்ததாக தெரிவித்தார். அதை, கலெக்டர் நேஹா சர்மாவும் உறுதி செய்தார். ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில் இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரிவித்தார். மீட்புப் பணிகள் துவங்கிய சில மணி நேரங்களுக்கு பின், விபத்தில் இருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது; மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது. 35 பயணியர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். மீட்புப் படையினர் விபத்து நடந்த இடத்தை அடைவதற்குள், தடம் புரண்ட ரயிலில் இருந்தவர்கள் தங்கள் உடைமைகளுடன் வெளியேறி தண்டவாளம் அருகே அமர்ந்திருந்தனர். முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு 40 பேர் அடங்கிய மருத்துவக் குழுவும், 15 ஆம்புலன்சும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டன. மத்திய அமைச்சரும், உள்ளூர் எம்.பி.,யுமான கீர்த்திவர்தன் சிங் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டார். பயணியருக்கு கோரக்பூரில் இருந்து மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், மங்காபுரில் இருந்து அந்த ரயில் புறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். விபத்து நடந்த இடத்தில் இருந்து மங்காபுர் அழைத்து செல்ல பஸ் வசதி செய்யப்பட்டது. விபத்து குறித்து ரயில்வே தொழில்நுட்பக் குழு விசாரணை மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் கீர்த்திவர்தன் தெரிவித்தார்.விபத்து நடப்பதற்கு முன், பலத்த வெடி சத்தம் கேட்டதாகவும், அதன் பின் ரயில் தடம் புரண்டதாகவும் ரயில் டிரைவர் தெரிவித்தார். எனவே, இதில் சதி வேலை உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.காயம் அடைந்தவர்களுக்கு உரிய மருந்துவ சிகிச்சை அளிக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், படுகாயம் அடைந்தோருக்கு 2.50 லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தோருக்கு 50,000 ரூபாயும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Raj Kamal
ஜூலை 19, 2024 11:47

10 வருஷம் BJP ஆட்சி செய்த பிறகும் இன்னும் காங்கிரெஸ்ஸை குறை சொல்லும் நிலை தான் உள்ளது என்றால், இது எவ்வளவு மோசமான நிலை? அதை முட்டு கொடுக்க ஆட்கள் வேறு?


Azar Mufeen
ஜூலை 19, 2024 11:23

ஊழலை மறைக்க, வெடி சத்தமாம், வெடித்திருந்தால் பெட்டிகள் உருக்குளைந்து இருக்காதா?


venugopal s
ஜூலை 19, 2024 10:45

உத்தரப் பிரதேசத்தில் நடந்ததால் இது விபத்து என்றும், இதேபோல் தமிழகத்தில் நடந்திருந்தால் தீவிரவாத செயல் என்றும் குற்றம் கண்டு பிடிக்கும் சங்கிகள் எங்கே போய் விட்டார்கள்?


Sampath Kumar
ஜூலை 19, 2024 09:23

சொந்த காசிலே சூனியம் வைத்து கொள்ளும் பிஜேபி கட்சிக்காரனுக்கள் வைத்துக்கொண்டு அடுத்த கட்சிக்காரன் மீதுபலி போடுவதில் வல்லவர்கள் பிஜேபி ஒழிந்தால் தான் நாடு நிம்மதியாக இருக்கும்


ஆரூர் ரங்
ஜூலை 19, 2024 11:25

நாட்டிலேயே அதிக சாலை விபத்து மரணங்கள் நிகழ்வது தமிழ் நாட்டில்தான். இதற்கு டாஸ்மாக் மது விற்கும் அரசு பொறுப்பேற்கட்டும்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 23, 2024 13:17

கலைஞர் கொண்டுவந்த திட்டத்தினால் தமிழக சாலை விபத்து வேற லெவல் போயிட்டுது , அதனை தடுத்து நிறுத்த ஏதாவது வழி இருக்கா சம்பத்?


Mario
ஜூலை 19, 2024 09:18

இதெல்லாம் UP ல் சாதாரணம்


Nandakumar Naidu.
ஜூலை 19, 2024 07:50

நம் நாட்டின் தேச வளர்ச்சியை விரும்பாத தேச மற்றும் சமூக விரோதிகளின் செயல் தான் இது. இதில் நம்.நாட்டில் உள்ள எதிர் கட்சிகளின் ஆசீர்வாதம் இவர்களுக்கு உள்ளது. முதலில் உள்ளூர் தேச மற்றும்.சமூக விரோதிகளை களை எடுக்க வேண்டும். தேச மற்றும் சமூக விரோத அரசியல் தலைவர்கள் உட்பட.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 19, 2024 05:59

மர்மமே உருவான வந்தேறிகள் முதலில் கல்லெறியில் ஈடுப்பட்டனர் , இப்போ கவிழ்ப்பு வேளையிலும் , இவர்களை இவர்கள் மதத்தினரே கலையெடுக்காம விட்டா பின்னர்?


Kasimani Baskaran
ஜூலை 19, 2024 05:38

காங்கிரசுக்கு சிறிது பலம் வந்துவிட்டாலேயே கூட தேசவிரோத சக்திகள் வேலையை காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். காங்கிரசை ஒழித்துக்கட்டுவது நாட்டுக்கு நல்லது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை