உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதச்சார்பின்மை என்ற வார்த்தையை இழிவாக பயன்படுத்துவதால் சமூகத்தில் பிளவு

மதச்சார்பின்மை என்ற வார்த்தையை இழிவாக பயன்படுத்துவதால் சமூகத்தில் பிளவு

காங்., முன்னாள் தலைவர் சோனியா:

இந்திய ஜனநாயகத்தின் அடித்தள துாணாக, மதச்சார்பின்மை உள்ளது. ஆனால், தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், மதச்சார்பின்மை என்ற வார்த்தையை இழிவாக பயன்படுத்துகின்றனர்; இதனால், சமூகத்தில் பிளவு ஏற்படுகிறது.

டவுட் தனபாலு:

எந்த மதத்துக்கும் சார்பாகவோ, எதிராகவோ செயல்படாமல் இருப்பது தான் உண்மையான மதச்சார்பின்மை... ஆனா, உங்க கூட்டணியில இருக்கிற தி.மு.க., தலைவர்களின் செயல்பாடுகளை பார்த்தாலே, மதச்சார்பின்மை என்ற வார்த்தையை இழிவாக பயன்படுத்துவது யார் என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுமே!---

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்:

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், 1.67 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். தொடர் சேவையின் வாயிலாக, 4 கோடி பேர் பயனடைந்துள்ள நிலையில், தொழிலாளரை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். அந்த வகையில், தொழிற்சாலைகளுக்கே சென்று, மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையிலான திட்டமாக, இது அமைய உள்ளது.

டவுட் தனபாலு:

இந்த மாதிரி புது புது திட்டங்களை அறிவிக்கிறது நல்லது தான்... அதே நேரம், அரசு மருத்துவமனைகளை தேடி வர்ற நோயாளிகளுக்கு நல்லபடியா சிகிச்சை அளித்து, அவங்களை குணப்படுத்தி அனுப்புறதுலயும் அக்கறை காட்டுனா, 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!---

பத்திரிகை செய்தி:

சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி கொடுத்தது தொடர்பான பண மோசடி வழக்கில், விசாரணைக்காக, புதுடில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனும், காங்., - எம்.பி.,யுமான கார்த்தி ஆஜரானார். ஏற்கனவே இவர் மீது, ஐ.என்.எக்ஸ்., மீடியா மற்றும் ஏர்செல் - -மேக்சிஸ் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

டவுட் தனபாலு:

தமிழக காங்., தலைவர் பதவியை அலங்கரிக்க வேண்டும் என, கார்த்தி துடியா துடிக்கிறார்... இத்தனை வழக்குல சிக்கியவருக்கு பதவியை குடுத்தா, நாளைக்கு திஹார் ஜெயில்ல இருந்து தான், கட்சி பணியை கவனிப்பாரோ என்ற, 'டவுட்' தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

r.sundaram
ஜன 04, 2024 14:41

மதசார்பின்மை என்ற வார்த்தையை அல்ல, மதச்சார்பின்மையையே கேவலமாக பயன்படுத்தியது காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சிகளும்தான். தனது பெயரிலேயே மதத்தை கொண்ட கட்சி மதசார்பற்ற கட்சி என்றதை கண்டுபிடித்தது இந்த இரு கட்சிகளும்தான்.


செந்தில் தென்காசி
ஜன 04, 2024 14:39

மத சார்பு இன்மை ~ என்று பேசி ~ இந்துக்களை ஏமாற்ற முடியாது


Sathyam
ஜன 04, 2024 12:51

get lost you poisionous italian vatican lady , wish and pray your whole family and party gets destroyed and perish soon for true Bharath


A1Suresh
ஜன 04, 2024 11:34

மதசார்பின்மை என்ற பெயரில் சனாதன தர்மத்தினை ஒழிப்பதே இவர்களின் வேலை . மதசார்பின்மை என்பதே ஒரு இழிச்சொல் தான் .உலகிலேயே அதை வெட்கமின்றி பயன்படுத்தும் ஒரே நாடு பாரதம் தான் . அதனை நம் மீது திணித்தது பிரிட்டிஷ் அரசாங்கம் தான் . இது ஒழியும் வரை பாரதம் வளராது


Suppan
ஜன 04, 2024 13:33

அவசர நிலை பிரகடனத்திற்குப்பின் இந்திரா அரசமைப்புச்சட்டத்தில் மதசார்பற்ற, சோஷலிச சமுதாயம் என்ற சொற்களைச் சேர்த்தார். இவை எல்லா கட்சிகளின் கொள்கைகளாகவும் இருக்கவேண்டும் என்றும் கட்டாயப்படுத்தினார். இதில் வேடிக்கை என்னவென்றால் முஸ்லீம் லீக், கிறிஸ்தவ ஜனநாயகக்கட்சி போன்றவை தாங்கள் மதச்சார்பின்மையை "ஏற்றுக்கொண்டன".சோஷலிசம் என்ற மாயையை ஆரம்பித்த சோவியத் சுக்கு நூறாகப் போய் பின்னர் அதைக் கைவிட்டுவிட்டது. "சோஷலிசத்தை" ஏற்றுக்கொண்ட நாடுகளும் அதைக் கைவிட்டுவிட்டு. இதே கதைதான் சோஷலிசம் இப்பொழுது மண்ணுக்குள் உறங்குகிறது. ஆக இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் எந்தவிதமான மதிப்பும் இல்லை. ஊரை ஏமாற்றும் வேலை.


Sathyam
ஜன 04, 2024 11:27

சரிதான் போ


பால் பாண்டி திண்டுக்கல்
ஜன 04, 2024 10:36

இந்துக்கள் அதிகமாக வாழும் நாட்டில் ~ இந்து கடவுளை திட்டுவது ~ இந்து மதம் சடங்குகளை இழிவாக பேசுவது தான் ~ மத சார்பு இன்மையா ??? போலி மதச்சார்பின்மை


Sampath Kumar
ஜன 04, 2024 09:41

ஏபிஓ பிஜேபி ஆட்சிக்கு வந்ததொ அப்போவே மத சார்பின்மை கோழி தோண்டி புதை க பட்டு விட்டது ஸநாயகம் கருத்து நெரிக்க பட்டு பேச முடியாமல் கிடக்குது அனைத்துக்கும் காரணம் பிஜேபி அரசின் மத வெறி தான் இதுக்கு முதல பதில் சொல்லுங்க டவுட்டு தனபாலு சும்மா குருட்டு தன்மை பேசாதீங்க


NicoleThomson
ஜன 04, 2024 10:56

நீங்க பயன்படுத்தும் மதசார்பின்மை இந்துக்களின் பண்டிகையின் பொது மிக அழகாக வெளிப்படும் , அது போலத்தான் உங்களின் பிறப்பும் இருக்குதா பிறப்பே?


vadivelu
ஜன 04, 2024 11:05

மத வெறி கூட்டம் என்றால் , எங்கள் மதம் மட்டுமே சிறந்தது, வாருங்கள் இந்துக்களே என்று கூவும் கூட்டம்தான்.எல்லோரும் சமம், ஏன் எங்களை மட்டும் வஞ்சிக்கிறீர்கள் என்று கேட்பவர்கள் இல்லை.


Duruvesan
ஜன 04, 2024 11:28

சரிங்க ,உங்க விடியல் கிட்ட போயி சொல்லு அதை , எவனும் அடுத்த மதத்தை ஏளனம் செய்யல விடியல் மாதிரி


தமிழ்வேள்
ஜன 04, 2024 11:41

ஆமாம் சம்பத்து ..குழி தோண்டி கோழியை புதை ...நீயும் உன் தமிழும் .....கட்டுமரம் உன் தமிழை படித்தால் நிச்சயம் தூக்குப்போட்டு கொள்ளும் ....த்தூ ..


DVRR
ஜன 04, 2024 17:36

முஸ்லீம் லீக்?? கிறித்துவ ஜனநாயகக்கட்சி??திருட்டு திராவிட மாடசாம்பிறாணி கட்சி இது மத சார்பின்மை கட்சி????கேட்கிறவன் கேனையன் என்றால் கேப்பையில் நெய் வடியுது என்று சொல்வது போல இருக்கின்றது.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 04, 2024 09:03

சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவர மதச்சார்பின்மை என்கிற வார்த்தையை கள்ளத்தனமாக அரசியல் சட்டத்தில் நுழைத்தது உங்க மாமியார் இந்திராதான் மேடம் ஜி ...... போயி வரலாறு தெரிஞ்சுக்கிட்டு வந்து பேசுவீங்களாம் ......


Ramesh Sargam
ஜன 04, 2024 07:36

ஆம், சோனியா காந்தி அவர்கள், முதலில் தன்னுடைய கூட்டத்தில் உள்ள திமுக வினரை கண்டிக்கவேண்டும். பிறகு மதச்சார்பின்மையை பற்றி பேசவேண்டும். கூட்டத்திலேயே திருடர்களை வைத்துக்கொண்டு, அதோ திருடன், அதோ திருடன் என்று கூச்சல் போடுவது சரியல்ல.


rajen.tnl
ஜன 04, 2024 09:23

கண்டிச்சிச்சா உள்ள 10 சீட்டும் இல்லாமல் போய் விடும்


Duruvesan
ஜன 04, 2024 07:24

மத சார்பின்மயின் அடையாளம் ஹிந்துவை திட்டு மார்கத்தை போற்று, ஆரியன் கூட்டணி எலெக்ஷன் வந்தா வேணும்.


A Viswanathan
ஜன 04, 2024 10:52

இந்தியாவின் மதசார்பின்மையை பற்றி பேச ....யார்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி