உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிப்ட் வேண்டாம் மோடிக்கு ஓட்டு போடுங்கள்: தெலுங்கானாவில் வைரலான திருமண பத்திரிகை

கிப்ட் வேண்டாம் மோடிக்கு ஓட்டு போடுங்கள்: தெலுங்கானாவில் வைரலான திருமண பத்திரிகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: தெலுங்கானாவில் திருமண பத்திரிகை ஒன்றில், 'திருமணத்திற்கு பரிசுகள் கொண்டு வர வேண்டாம், பிரதமர் மோடிக்கு ஓட்டளியுங்கள்' என்ற வாசகம் குறிப்பிட்டிருந்தது வைரலாகியுள்ளது.லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், விதவிதமான பிரசார யுக்தியை அந்தந்த கட்சிக்காரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் வசிக்கும் நந்திகாந்தி நர்சிம்லு என்பவர், தனது மகன் சாய் குமாருக்கு மஹிமா ராணி என்பவருடன் ஏப்.,4ல் திருமணம் செய்துவைக்க உள்ளார். அதற்காக திருமண பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கி வருகிறார்.அந்த பத்திரிகையில், பிரதமர் மோடியின் படத்துடன் 'பிரதமர் மோடிக்கு ஓட்டளியுங்கள். இதுவே நீங்கள் கொடுக்கும் சிறந்த பரிசாக இருக்கும்' எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த பத்திரிகை தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து நந்திகாந்தி கூறுகையில், 'பிரதமர் மோடிக்கு ஓட்டளிக்க வைக்க வேண்டும் என்ற எனது யோசனையை குடும்பத்தினர் வரவேற்றனர். மேலும், அதனை செயல்படுத்தவும் அனுமதித்தனர்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பல்லவி
மார் 26, 2024 17:00

குஜராத் மாநில மக்களை மட்டும் முன்னேற்ற பாடுபடுவாங்க


Devaraju
மார் 25, 2024 16:42

Maybe he is the one true Indian ? வாழ்த்துக்கள்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை