உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொட்டி தீர்த்த மழை: வெள்ளத்தில் மிதந்த கோல்கட்டா விமான நிலையம்

கொட்டி தீர்த்த மழை: வெள்ளத்தில் மிதந்த கோல்கட்டா விமான நிலையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: குறைந்த காற்றழுத்ததாழ்வு மண்டலம் காரணமாக பெய்த மழையால் கோல்கட்டா விமான நிலையத்தில் வெள்ள நீர் பாய்ந்தோடியது. பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.மேற்கு வங்க மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக கோல்கட்டா, ஹவுரா, பாரக்போர் மற்றும் சால்ட் லேக் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், கோல்கட்டாவில் பல சாலைகளில் மழைநீர் தேங்கியது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மழை காரணமாக கோல்கட்டாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலைய ஓடுபாதைகளில் வெள்ள நீர் பாய்ந்தோடியது. இதன் காரணமாக விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.இதனிடையே, மாநிலத்தில் மழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு சில மாவட்டங்களுக்கு ‛ரெட் அலெர்ட்'டும், சில மாவட்டங்களுக்கு ‛ யெல்லோ அலெர்ட்'டும் விடுக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஆக 03, 2024 20:12

இதற்கும் காரணம் மோடிதான் என்று மாநில முதல்வர் மமதா கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை