உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டிலேயே முதன் முறையாக உ.பி.,யில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வாக்குசாவடி அமைப்பு

நாட்டிலேயே முதன் முறையாக உ.பி.,யில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வாக்குசாவடி அமைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: நாட்டிலேயே முதன் முறையாக உ.பி.யில் அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் வாயில் காலனிகளில் வாக்குசாவடி அமைக்கப்படும் என மாநிலதேர்தல் அதிகாரி கூறினார். மாநில சட்டசபை தேர்தல்கள் உள்ளாட்சி அமைப்பு தேர்தல், பார்லி.தேர்தல் போன்றவற்றில் மக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக வாக்குசாவடி பெரும்பாலும் பள்ளிகளையே தேர்ந்தெடுப்பதே வழக்கம். ஆனால் உ.பி., மாநிலத்தில் இந்த முறை முதன் முறையாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்குசாவடி அமைக்கப்பட உள்ளது.இது குறித்து மநில தலைமை தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா கூறியதாவது: மாநிலத்தில் 217 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நுழைவாயில் காலனிகளை நாங்கள் கண்டறிந்து உள்ளோம். அதிகபட்சமாக தாத்ரி (68) நொய்டா (67) சாஷிபாபாத் (37), முராத்நகர் (8) மற்றும் லோனி, காசியாபாத் உள்ளிட்ட நகரங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.எந்த ஒரு வாக்காளரும் வாக்களிக்க 2 கி.மீ., க்கு மேல் பயணிக்க வேண்டியதில்லை என்ற எண்ணத்தில் வாக்களிக்கும் இடங்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.மேலும் சுமார் 'சுமார் 82,000 வாக்குச் சாவடிகளில் நேரடி இணையதள வசதி இருக்கும். மேலும், அனைத்து வாக்குச் சாவடிகளும் தரை தளத்தில் இருப்பதை உறுதி செய்துள்ளோம். சக்கர நாற்காலி, மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு சாய்வுதளம், கழிப்பறை, போதிய வெளிச்சம், குடிநீர், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sampath Kumar
மார் 18, 2024 10:56

nallavasathiya வோட் மெஷினை மாற்றலாம் அதுக்கு தான் போல கில்லாடி கிம்பர்களை


தஞ்சை மன்னர்
மார் 18, 2024 10:28

ஹி ஹி அப்புரம் என்ன இப்பவே பி சே பி யின் வெற்றி உறுதியாகி விட்டது உ பி யில்


Subramanian
மார் 18, 2024 05:22

இது முதல் கிடையாது. மூன்று தேர்தல்களாக எங்கள் சொசைட்டியில் வாக்கு சாவடி அமைத்தள்ளார்கள். அதற்கு முன்பே மற்ற சொசைட்டிகளிலும் அமைத்துள்ளார்கள். இது 20 வருடமாக இருக்கிறது


D.Ambujavalli
மார் 18, 2024 04:08

வயதானவர்களுக்கு கட்சிகள் கார் சவாரி, ஒரு வழிக்கு மட்டும், கொடுப்பது, முதியோரைத் தூக்கி வருவது என்ற டிராமா இல்லாது ஆயிரக்கணக்கில் ஒரே இடத்தில் ஓட்டளிக்க வசதி நல்லதுதான் ஆனால் கள்ள வோட்டு , பூத் முற்றுகை என்று குண்டர்கள் புகுந்தால் மிஷின்களுக்கும், அதிகாரிகள் வாக்காளர்களுக்கும் எந்த அளவு பாதுகாப்பு கிடைக்கும் என்பதையும் பார்க்க வேண்டும்


PRAKASH.P
மார் 17, 2024 22:47

Super


Oviya Vijay
மார் 17, 2024 22:00

என்ன என்ன கோமாளித்தனம் பண்ணணுமோ பண்ணுங்க... உபி னா உடன்பிறப்பு மட்டும் கெடையாது... அது உத்திர பிரதேசத்தையும் குறிக்கும்... சங்கி உபி... திருத்த முடியாது இவனுங்கள...


Ramesh Sargam
மார் 17, 2024 21:16

எல்லோரும் வோட்டு போடவேண்டும். வோட்டு போடாமல் எனக்கு அது செய், எனக்கு அது கிடைக்கவில்லை என்று சொல்ல குறை சொல்லக்கூடாது.


Raghavan
மார் 17, 2024 21:13

வரவேற்கத்தக்க ஒன்று. பாதுகாப்பு ஏற்படுகளை இரண்டு அல்லது மூன்று நாட்கள் முன்பே செய்யவேண்டும். இல்லையென்றால் சமூக விரோதிகள் ஏதேனும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி பிரச்சனையை உருவாக்கலாம்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை