உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆமதாபாத்தில் கடத்தல் கும்பலிடம் இருந்து ரூ.7.75 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

ஆமதாபாத்தில் கடத்தல் கும்பலிடம் இருந்து ரூ.7.75 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: ஆமதாபாத் விமான நிலையத்தில், கடத்தல் கும்பலிடம் இருந்து ரூ.7.75 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில், தங்கத்தை கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் அதிகாரிகள் (டி.ஆர்.ஐ.,) சோதனை நடத்தினர். அப்போது கடத்தல் கும்பலிடம் இருந்து ரூ.7.75 கோடி மதிப்புள்ள 10.32 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 10 பேரை கைது செய்தனர்.கடந்த நான்கு மாதங்களாக, இந்த கடத்தல் கும்பல் வெளி மாநிலங்களுக்கு தங்கத்தை கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து ஆமதாபாத்தில் தங்கள் கூட்டாளியிடம் கொடுக்க சென்றோம் என கைது செய்யப்பட்ட 10 பேரும் ஒப்புக் கொண்டனர். 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
மே 26, 2024 14:46

எப்பவுமே குஜராத்தி நகை வியாபரிகளுக்கு தங்கத்தின் மீது தனி ஈப்பு உண்டு. மாகாராஷ்ராவில் பெரும்பாலான ஜுவல்லரிகள் குஜராத்திகள் தான்.


JOY
மே 26, 2024 13:25

ஆமதாபாத் தமிழ் நாட்டில தானை இருக்கு ?


பாமரன்
மே 26, 2024 12:28

என்னது இது கொழப்பம்...?


சுக்கிரன்
மே 26, 2024 12:08

ஆமதாபாதில் திருட்டு திராவிடனுங்க இருக்க முடியாதே. அப்போ உள்ளூர் குஜராத்தி மாடல் வேலை செய்யுது.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை