உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: இடைத்தரகருக்கு ஜாமின் மறுப்பு

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: இடைத்தரகருக்கு ஜாமின் மறுப்பு

புதுடில்லி: ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் உள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட வி.வி.ஐ.பி.,க்கள் பயணம் செய்ய ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த 'அகஸ்டா வெஸ்ட்லேண்ட்' நிறுவனத்திடம், ஹெலிகாப்டர்கள் வாங்க, ஒப்பந்தம் போடப்பட்டதில் ரூ. 3,600 கோடி ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.இந்த ஊழல் விவகாரத்தில், இடைத்தரகர் கிறிஸ்டியன் மிகைலை 59, 2018-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில், சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்து இந்தியா கொண்டு வந்து, டில்லி திஹார் சிறையில் அடைத்தனர். அவர் மீதான வழக்கு குறித்த விசாரணை, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.கடந்த 2020ம் ஆண்டு தனக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் , இடைக்கால ஜாமின் கோரியும் டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி யானது.இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த பிப். 17-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சகுந்தலா
மார் 19, 2024 08:09

இவனை துபாயில் வெச்சு புடிக்க முடியுது.


Ramesh Sargam
மார் 19, 2024 03:49

இந்தியாவில் ஒரு வழக்கு பதிவானால், அது என்று முடிவுக்கு வரும் என்று நாம் நினைத்துப்பார்க்கக்கூட முடியாது. அந்த அளவுக்கு நமது நாட்டு சட்டங்கள், அதில் உள்ள ஓட்டைகள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 18, 2024 20:55

அவ்வப்போது காங்கிரஸ் தலைமைக் குடும்பத்தை அச்சுறுத்த இவ்வழக்கு உயிர்ப்புடன் இருக்க வேண்டியது அவசியம் .....


Sivakumar
மார் 18, 2024 22:20

ஒரு குடும்பத்தை அச்சுறுத்த ஒரு வழக்கு ஒரு நாட்டின் விசாரணை அமைப்புகள். நல்ல தர்மம் தர்மராஜ். இதுக்குப்பேரு தான் வெறுப்பு, புரிஞ்ஜா சரி. இதே நபர் என்னை சிபிஐ அதிகாரிக காந்தி குடும்பதில் யாரேனும் சம்பந்தப்படுத்தி சொல்லு விட்டுடுவோம்னு சொன்னாங்கனும் சொன்னார். அதுவம் நல்ல தர்மம் தானுங்கோவ் உங்களுக்கு


visu
மார் 19, 2024 06:41

அப்ப அவங்க எல்லாம் பிராடுகள் இல்லையா ?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை