உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்து, முஸ்லிம் என அரசியல் செய்ய மாட்டேன்: பிரதமர் மோடி பேட்டி

ஹிந்து, முஸ்லிம் என அரசியல் செய்ய மாட்டேன்: பிரதமர் மோடி பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ ஹிந்து, முஸ்லிம் என அரசியல் செய்ய மாட்டேன். இது எனது தீர்மானம்'' என பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தீர்மானம்

உ.பி., மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் பின்னர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=envwsnmo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நாட்டு மக்கள் எனக்கு ஓட்டுப்போடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நான் என்று ஹிந்து, முஸ்லிம் என அரசியல் செய்கிறோனோ அன்று பொதுவாழ்க்கைக்கு தகுதி அற்றவன் ஆகிவிடுவேன். ஹிந்து, முஸ்லிம் என அரசியல் செய்ய மாட்டேன். இது தான் எனது அரசியல் தீர்மானம்.

அதிர்ச்சி

அதிக குழந்தைகளை பெற்றவர்களை பற்றி நான் பேசும் போது, அதனை முஸ்லிம்கள் என நினைத்துக் கொள்வது ஏன்? இது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஏழைக் குடும்பங்களின் நிலை இதுதான். எங்கு வறுமை இருக்கிறதோ, அங்கு நிறைய குழந்தைகள் உள்ளனர். ஹிந்து குடும்பத்திலும் இதுபோன்ற பிரச்னை உள்ளது. அவர்களால், குழந்தைகளுக்கு சரியான கல்வியை கொடுக்க முடியவில்லை. நான் ஹிந்துக்கள் என்றோ அல்லது முஸ்லிம்கள் என்றோ பெயர் சொல்லவில்லை. உங்களால் எத்தனை குழந்தைகளை வளர்க்க முடியுமோ அத்தனை குழந்தைகளை மட்டும் பெற்றுக் கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளேன். உங்கள் குழந்தைகளை அரசு கவனித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையை உருவாக்காதீர்கள்.

முஸ்லிம் நண்பர்கள்

நான் சிறு வயதில் முஸ்லிம் குடும்பத்தினர் மத்தியில் வாழ்ந்தேன். எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர். 2002க்கு பிறகு எனது பெயரை கெடுக்க முயற்சி நடந்தது. எனது வீடருகே முஸ்லிம் குடும்பத்தினர் இருந்தனர். ரம்ஜான் அன்று, வீட்டில் சமைக்க மாட்டோம். முஸ்லிம் வீடுகளில் இருந்து எங்களுக்கு உணவு வரும்.

ஆதரவு

குஜராத் கலவரத்திற்கு பின்பு, ஆமதாபாத்தில் மானேக் சவுக் என்ற இடம் உள்ளது. அங்கு மாலையில் பலர் சென்று உணவு சாப்பிடுவர். அதில் அனைத்து வியாபாரிகளும் முஸ்லிம்கள். வாங்குபவர்கள் ஹிந்துகள். சிலரை அனுப்பி ஆய்வு செய்ய சொன்னேன். அப்போது எனக்கு எதிராக ஒருவர் பேசும் போது, கடைக்காரர் ஒருவர் அவரை நிறுத்தி, ‛மோடிக்கு எதிராக ஒரு வார்த்தை கூறாதீர்கள். இன்று எனது குழந்தை பள்ளிக்கு செல்வதற்கு மோடியே காரணம் ' என்றார். அவரது கருத்தையே 90 சதவீதம் பேர் கூறினர்.

தாரக மந்திரம்

இது போல் எனது வாழ்க்கையில் நிறைய நடந்துள்ளது. அதனை நான் விளம்பரப்படுத்துவது கிடையாது. நான் ஓட்டு வங்கி அரசியலுக்காக பணியாற்ற மாட்டேன். ஏதாவது தவறு நடந்தால், அதனை தவறு என சொல்லிவிடுவேன். ‛‛ அனைவரின் வளர்ச்சி; ஒவ்வொருவரின் வளர்ச்சி ' என்பதே எனது தாரக மந்திரம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Rajendra Kumar
மே 16, 2024 04:33

நாட்டு நலன் மட்டுமே எண்ணும் பிரதமர் மோடிஜி


முருகன்
மே 15, 2024 19:59

சில நாட்களுக்கு முன் பேசியது என்ன என கேட்டால் உண்மை தெரியும்


Rajinikanth
மே 15, 2024 18:14

முதலில் இதற்கு பெயர் பத்திரிகையாளர் சந்திப்பு இல்லை பேட்டி. ஒரு நாளிதழுக்கோ அல்லது செய்தி channelukko மட்டும் நேரம் ஒதுக்குவது இங்கு என்ன கேள்விகள் கேட்கப்படுகின்றனவோ அவை அனைத்தும் முன்னதாகவே ஜி அவர்களுக்கு வழங்கப்பட்டு, அவருக்கு பிடித்த கேள்விகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, அவற்றிற்கு மற்றவர்களால் பதில்கள் தயாரிக்கப்பட்டு சரி பார்க்கப்பட்டு பின்னர் வழங்கப்படும் தைரியமாக, செய்தியாளர் கூட்டம் நடத்தி, என்ன என்ன கேள்விகள் வருகின்றனவோ, அவற்றிற்கு தானே சிந்தித்து பதில் தர சொல்லுங்கள் பார்ப்போம், இவருடைய அறிவாற்றலை.


Chakkaravarthi Sk
மே 15, 2024 19:40

மற்ற அரசியல்வாதிகள் எப்படி செயல்படுகிறார்கள்?


jayvee
மே 15, 2024 18:00

இது போன்று வருடத்திற்கு குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு முறையாவது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு வைத்திருந்தால் வெறுப்பு இன்னும் குறைந்திருக்கும்


jayvee
மே 15, 2024 18:00

இது போன்று வருடத்திற்கு குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு முறையாவது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு வைத்திருந்தால் மோடி மீது உள்ள வெறுப்பு இன்னும் குறைந்திருக்கும்


J.V. Iyer
மே 15, 2024 17:55

ஆஹா அருமை இதுபோன்ற ஒப்பற்ற விஸ்வகுருவை பிரதமராக அடைய நாம் புண்ணியம் செய்திருக்கவேண்டும்


Rajarajan
மே 15, 2024 17:25

சரியோ தவறோ, சபாஷ் ஆனால், இதேபோல திமுக, நாங்கள் அரசியல் செய்யமாட்டோம் என சொல்ல தைரியம் உள்ளதா


Kanagaraj M
மே 15, 2024 16:45

நீங்கள் நல்லவர்தான் சில பேர் தான் அந்த மாதிரி


ராம் ராபர்ட் ரஹீம்
மே 15, 2024 15:06

இதே செய்தியை தினத்தந்தி எப்படி எழுதியிருக்குன்னு படிச்சுப் பாருங்கள் திமுக சொம்புகள் மட்டும் அடுத்தவரை மட்டம் தட்டும் வேலையை சரியாக செய்கிறார்கள்


சிவன்
மே 15, 2024 15:05

எப்புடி இருந்த நான் இப்போ


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை