உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூரில் இளம் பெண்கள் நிர்வாணம்: போலீஸ் வேடிக்கை; குற்றப்பத்திரிகையில் ‛திடுக்‛

மணிப்பூரில் இளம் பெண்கள் நிர்வாணம்: போலீஸ் வேடிக்கை; குற்றப்பத்திரிகையில் ‛திடுக்‛

இம்பால்: மணிப்பூரில் கூக்கி பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வணமாக இழுத்து சென்ற சம்பம் தொடர்பாக சி.பி.ஐ, தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மணிப்பூரில் கடந்தாண்டு மே 4ம் தேதி காங்போப்கி மாவட்டத்தைச் சேர்ந்த இரு பழங்குடியின இளம் பெண்களை , இளைஞர்கள் நிர்வணமாக அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி நாட்டையே உலுக்கி எடுத்தது.மணிப்பூர் அரசு மற்றும் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் சி.பி.ஐ.,வழக்கு பதிந்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சம்பவத்தின் போது சிக்கிய இரு கூக்கி இனப் பழங்குடி பெண்களை வன்முறை கும்பல் தாக்கி பலாத்காரம் செய்தது. பின் அவர்களை நிர்வாணப்படுத்தியது. அப்போது சாலையோரம் போலீஸ் வாகனத்துடன் அங்கு 7 போலீசார் இருந்துள்ளனர். நிர்வாணமாக இழுத்துச் செல்லப்படும் முன் இருபெண்களும் தங்களை காப்பாற்று மாறு போலீசாரிடம் கெஞ்சியுள்ளனர். ஆனால் போலீஸாரோ வாகனத்தை எடுக்க சாவி இல்லை என்று கூறி, வன்முறை கும்பலிடமே இரு பெண்களை விட்டுச் சென்றனர்.இதையடுத்து இரு பெண்களையும் வன்முறை கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்றனர். இதனை போலீசாரே கைகட்டி , வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
மே 01, 2024 10:29

யாரைக் கைது செய்து நடவடிக்கை எடுத்தாலும் இன மோதல் நடக்கும். நேற்று கூட ராணுவம் தம்மிடம் திருடப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்த போது குக்கி மக்கள் ஆயுதங்களை தங்களிடம் திருப்பித்தர கோரி மறியல் செய்தார்கள். மணிப்பூர் விவகாரம் முள்ளில் சிக்கிய சேலை மாதிரி.


அப்புசாமி
மே 01, 2024 07:57

ஹா.ஹா. எங்க ஆட்சியில் பெண்களுக்கு சூப்பர் பாதுகாப்பு. அதுவும் போலீஸ் பாதுகாப்பு.


முருகன்
மே 01, 2024 07:50

சிபிஜ என்றாலே திடுக் திடுக் தான் . திசை திருப்பும் வேலை


Dharmavaan
மே 01, 2024 06:32

இந்த வந்தேறிகளுக்கே இங்குள்ள தேசவிரோத சக்திகள் போராடுகின்ற்றன


Priyan Vadanad
மே 01, 2024 07:58

இரு பெண்களின் அவல நிலையை தெளிவாக குறிப்பிட்ட பிறகும் இப்படி அதை மறைத்து கருத்து பதிவிட்ட உங்கள் மனநிலை எவ்வளவு அசிங்கமானது இப்படிப்பட்ட மனநிலை இருப்பவர்கள் கூடாரம்தான் உங்கள் கட்சியோ


Kasimani Baskaran
மே 01, 2024 05:16

எல்லைகள் இல்லாமலிருந்தால் யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம் என்பதுதான் இன்றைய நிலை ஆகவே யார் இந்தியர்கள், யார் வெளிநாட்டினர் என்றெல்லாம் எளிதில் சொல்லிவிட முடியாது எல்லைகள் மிக அவசியம் வேலி போட்டால் சமாளிக்கலாம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை