உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / " மனிதநேயம் கொண்ட இந்தியா" - பிரதமர் மோடி

" மனிதநேயம் கொண்ட இந்தியா" - பிரதமர் மோடி

புதுடில்லி: ‛‛ மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடமாக இந்தியா விளங்குகிறது'' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் இத்தகைய நிகழ்ச்சியில் பங்கேற்பது ஆறுதல் அளிக்கிறது. இந்தியா, உலகின் பழமையான நாகரீகம் கொண்ட நாடு மட்டும் அல்ல. மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடமாகவும் உள்ளது. தனக்காக மட்டும் அல்லாமல் உலகம் முழுமைக்கும் இந்தியா சிந்திக்கிறது. கொள்கை பற்றி பேசும் நாடாக இந்தியா உள்ளது.குழப்ப நிலையில் சிக்கி உள்ள இன்றைய உலகம், இந்தியாவிடம் இருந்து அமைதியை எதிர்பார்க்கிறது. உலகளாவிய தளங்களில் முழு நம்பிக்கையுடன் உண்மையையும், அஹிம்சையையும் இந்தியா முன்னெடுத்துச் செல்கிறது. உலகளாவிய பிரச்னைகளுக்கு இந்தியாவின் பழமையான கலாசாரம், பாரம்பரியத்தில், தீர்வு உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

முருகன்
ஏப் 21, 2024 20:57

மனித நேயம் அதிகமாக உள்ளதால் தான் கடந்த பத்து வருடங்களில் விலைவாசி வின்னை முட்டி நிற்கிறது


அப்புசாமி
ஏப் 21, 2024 12:57

அதான் பிலிப்பைன்சுக்கு பிரம்மோஸ் எற்றுமதி. அவிங்க அடிச்சிக்கிட்டு செத்தால் நாங்க பொறுப்பல்ல.


nizamudin
ஏப் 21, 2024 12:29

தொடர்ச்சியாக மூன்று அல்லது நான்கு முறை குஜராத் முதல்வராக அதை தொடர்ந்து வருடங்கள் பாரத பிரதமராக தற்போது மிகவும் கடுமையாக உழைத்து வ்ருகிறார் மோடிஜியின் உழைப்பிற்கு நிகர் எதுவும் இல்லை


Dharmendran
ஏப் 21, 2024 12:23

மனித நேயம் மரத்து போன உலகின் ☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை