உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் பா.ஜ., பிரமுகர் கொலை: 15 பேருக்கு தூக்கு தண்டனை

கேரளாவில் பா.ஜ., பிரமுகர் கொலை: 15 பேருக்கு தூக்கு தண்டனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவில் பா.ஜ.,வைச் சேர்ந்த ரஞ்சித் சீனிவாசன் என்பவர் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.பா.ஜ.,வின் ஓபிசி மோர்சா பிரிவின் கேரள மாநிலத் தலைவர் ரஞ்சித் சீனிவாசன். இவர், கடந்த 2021ம் ஆண்டு டிச.,19ல் வீட்டில் இருந்த போது மனைவி, குழந்தைகள் முன்பு பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொள்ளப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=spx0cf36&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கு, ஆலப்புழாவில் உள்ள மாவேலிக்கரா மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 12 பேருக்கு நேரடியாக தொடர்பு இருந்ததும், 3 பேர் உதவியாக இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்த நைசாம், அஹ்மல், அனுப், முகமது அஸ்லாம், சலாம் போனாட், அப்துல் கலாம், சப்ரூதீன், முன்ஷாட், ஜசீப் ராஜா, நவாஸ், ஷீமீர், நாசீர், ஜாகீர் உசைன், ஷாஜி , சம்னாஸ் அஸ்ரப் ஆகிய 15 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

Rajagopal
ஜன 30, 2024 21:41

இவர்கள் இந்த தண்டனைக்கு மேல் முறையீடு கேட்பார்கள். இடதுசாரிகள், இஸ்லாமியர்கள் மற்றும் பலர் இவர்களுக்கு மன்னிப்பு வேண்டி மனு தாக்கல் செய்வார்கள். ஒரு இருபது வருடங்களுக்கு இழுத்தடிப்பார்கள். அதற்குள் எல்லோரும் இந்த விஷயத்தை முழுதும் மறந்து விட, இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். ராஜிவ் காந்தி கொலைவழக்கில் மாறியவர்கள் எல்லோரும் இப்போது வெளியில் வந்து விட்டார்கள். நம் ஊரில் சட்ட ரீதியாக எந்த நீதியும் கிடைப்பதில்லை. என்கவுண்டர்தான் சரியான நீதியாகப் படுகிறது.


பேசும் தமிழன்
ஜன 30, 2024 20:06

சட்டத்தை இன்னும் கடுமையாக்க வேண்டும்... உயர்நீதிமன்றம்... உச்ச நீதிமன்றம்... எ‌ன்று வழக்கை இழுத்தடித்து... வழக்கை ஒன்றுமில்லாமல் செய்து விடுவார்கள்.... தண்டனை உடனே வழங்க வேண்டும்.


jayaraman
ஜன 30, 2024 19:01

இந்த தண்டனை திருத்தப்படாமல் நிறைவேற்றினால் தான் தீவிரவாதம் ஒழியும் . இல்லையெனில் அவர்கள் நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே பிரியாணி, சில்லி சிக்கன் சாப்பிட்டு ஏப்பம்மிடுவார்கள் .ஆனாலும் சட்டத்தில் எத்தனை எத்தனை ஓட்டைகள் உண்டோ அனைத்தையும் பிரயோகிப்பார்கள்


Anbuselvan
ஜன 30, 2024 18:36

சரியான தீர்ப்பு. இதுவே தமிழ்நாடாக இருந்தால் உடனடியாக ஏதோ தத்து பித்துன்னு வேண்டாதையெல்லாம் கூறி அவர்களது விடுதலைக்கு வழிவகுப்பர்.


RAMESH
ஜன 30, 2024 18:16

உச்ச நீதிமன்றம் போனாலும் இவர்களுக்கு தூக்கு தண்டனையை முறை படுத்த வேண்டும் . இந்த பதினைந்து தீவிரவாதிகளின் கண்களில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் மரண பயத்தை காட்ட வேண்டும் . தற்போதைய தீர்ப்பு வாசித்தபின் ஒரு துளி பயம் கூட இவர்களிடம் தென்படவில்லை . ஜனம் டிவி பாருங்கள் .


கருத்து சுந்தரம்
ஜன 30, 2024 18:00

Coming soon.....Human Rights கும்பல். கருணை மனு போட்டு, அதற்கும் அரசு இயந்திரம் சரின்னு சொல்லி, இவனுங்க இன்னும் பத்து கொலை பண்ண plan போடுவானுங்க.


Bahurudeen Ali Ahamed
ஜன 30, 2024 17:10

தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.


Yaro Oruvan
ஜன 30, 2024 17:06

உணர்ச்சி வசப்பட்டு கொலை செய்வது ஒரு ரகம்.. அவர்களுக்கு என்ன செய்கிறோம் என்பதே தெரியாது.. ஆனால் பல நாள் திட்டமிட்டு கொலை செய்வது என்பது வேறு .. இந்த கும்பல் அதே ரகம்..விடுதலை செய்யணும்னு கூப்பாடு போடுவாங்க.


நரேந்திர பாரதி
ஜன 30, 2024 16:37

இது மாவட்ட நீதிமன்றம்தானே?? கண்டிப்பா உயர் மற்றும் உச்ச நீதிமன்றக்கள் கண்டிப்பாய் இந்த விடுதலை செய்யும்


DVRR
ஜன 30, 2024 16:02

கூடுதல் நீதிமன்றம் தானே கவலை வேண்டாம் உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் எல்லாம் இருக்கின்றது ????அங்கு சட்டம் வளைந்து நெளிந்து என்ன வேண்டுமானலும் செய்யும்???இந்த செய்தி வெறும் டப்பா அடிப்பதற்குத்தான் சரி???அதன் விவாதம் எப்படி இருக்கும்????ஒரு ஆள் மரணத்திற்கு 15 பேர் மரணிப்பதா??அப்படி சட்டத்தில் சொல்லவில்லை???மைனாரிட்டி மக்கள் மீது இப்படி செய்வது மிகவும் தவறு - இப்படிக்கு காங்கிரஸ் திமுக திரிணாமுல் காங்கிரஸ் அரசியலை வியாதிகள்


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை