உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெறுப்புணர்வை எதிர்த்து ஒன்றிணைந்து போராடுவோம்: தொண்டர்களுக்கு ராகுல் வலியுறுத்தல்

வெறுப்புணர்வை எதிர்த்து ஒன்றிணைந்து போராடுவோம்: தொண்டர்களுக்கு ராகுல் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: 'பா.ஜ.,வினர் பரப்பும் வெறுப்புணர்வை எதிர்த்து நாம் ஒன்றிணைந்து போராடுவோம், வெற்றி பெறுவோம்' என தொண்டர்கள் மத்தியில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியுள்ளார்.'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை' என்ற பெயரில் மணிப்பூர் முதல் மஹாராஷ்டிராவின் மும்பை வரை 2வது கட்ட யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் எம்.பி., ராகுல். இந்த யாத்திரை தற்போது பீஹார் மாநிலத்தில் தொடர்கிறது. பீஹாருக்குள் யாத்திரை நுழைந்ததும், ராகுல் வந்த ஜீப்பை அம்மாநில முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஓட்டி வந்தார். ராகுலுக்கு காங்கிரஸ் மற்றும் தேஜஸ்வி கட்சியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.மொஹனியா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தொண்டர்களுக்கு மத்தியில் ராகுல் பேசியதாவது: காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளின் தொண்டர்களாகிய நீங்கள், மக்களை ஒன்றிணைக்க அன்பு கடையை திறந்துள்ளீர்கள். பா.ஜ.,வினர் பரப்பும் வெறுப்புணர்வை எதிர்த்து நாம் ஒன்றிணைந்து போராடுவோம், வெற்றி பெறுவோம். இது வெறுப்புக்கான நாடு அல்ல; இது அன்பும் சகோதரத்துவமும் கொண்ட நாடு. உங்கள் (தொண்டர்கள்) ரத்தத்தில், உங்கள் டிஎன்ஏ.,வில் வெறுப்பு இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

பேசும் தமிழன்
பிப் 17, 2024 11:10

நாட்டு மக்கள் போராட வேண்டியது கான் கிராஸ் கட்சியுடன் தான்... பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற எதிரி நாடுகளுடன் இல்லை.... அவர்களை விட உள்நாட்டில் இருக்கும் தேச விரோத சக்திகள் மோசமானவர்கள் ... .. எதிரிகளை எப்போது வேண்டுமானலும் அழிக்கலாம்.... ஆனால் கூடவே இருந்து கொண்டு குழி பறிக்கும் உங்களிடம் தான் மக்கள் எச்சறிக்கையாக இருக்க வேண்டும்.


பேசும் தமிழன்
பிப் 17, 2024 07:27

நீங்க போடும் பால் எல்லாமே நோபால் தான்..... வேறு ஏதாவது நடித்து முயற்சி செய்யலாம் !!!!


Ramesh Sargam
பிப் 17, 2024 06:43

கூட்டணி உறுப்பினர்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராக கிழண்டு போகிறார்கள். இதில் மீண்டும் ஒன்றிணைந்து போராடுவார்களாம்...? கிழிஞ்சது கிருஷ்ணகிரி...


Jayaraman Pichumani
பிப் 17, 2024 03:31

இவன் கண்ணாடியைப் பார்த்து பேசிக் கொண்டிருக்கிறான்.


இராம தாசன்
பிப் 17, 2024 01:06

மைனாரிட்டி அரசியல் செய்யும் பப்பு & கூட்டணி வெறுப்பை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை


பேசும் தமிழன்
பிப் 16, 2024 20:14

முதலில் உங்களிடம் மற்றும் உங்கள் கான் கிராஸ் கட்சியிடம் இருக்கும் ..... பிஜெபி மற்றும் இந்துக்கள் மீது கொண்டுள்ள வெறுப்புணர்வை விட சொல்லுங்கள்.... மக்கள் நாங்கள் ஏற்கனவே ஒன்றுபட்டு தான் இருக்கிறார்கள்.....அதனால் தான் வெறுப்புணர்வை வளர்க்கும் உங்கள் கான் கிராஸ் கட்சியை தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்து கொடுக்காமல் விரட்டி அடித்தனர்.


Thiruvengadam Ponnurangam
பிப் 16, 2024 20:10

ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்.. சும்மா இருந்தாலே நாடு நல்லா இருக்கும். வெறுப்பை விதைத்து வளர்க்க நீ பேசுவதை பார்க்க வேடிக்கையாக உள்ளது


M.S.Jayagopal
பிப் 16, 2024 18:58

ராஹுல்காந்தி கோடிக்கணக்கில் 'அன்பு' என்று நோட்டீஸ் அச்சடித்து ,தம் யாத்திரை முழுவதும்,மக்களிடம் விநியோகம் செய்யலாம்.


Duruvesan
பிப் 16, 2024 18:06

அப்போ நீ ஏன் மூர்கனுங்க இருக்க தொகுதி ல போட்டி போடரே?


DVRR
பிப் 16, 2024 17:43

குழந்தாய் காலையிலிருந்து இரவு தூங்கும் வரை பின் நீ என்ன செய்கின்றாய் மோடி தப்பு பிஜெபி தப்பு இதே உனது வார்த்தை. இந்த வெறுப்புணர்வை எதிர்த்து ஒன்றிணைந்து போராடுவோம்: தொண்டர்களுக்கு ராகுல் வலியுறுத்தல் அப்படித்தான் சாதாரண மக்கள் நினைக்க முடியும். முதலில் மோடி பிஜேபி வெறுப்புணர்வை நிறுத்து இந்துக்கள் எதிர்ப்புணர்வை நிறுத்து


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை