உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை: கார்கே உறுதி

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை: கார்கே உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை (எம்.எஸ்.பி.,) சட்டப்படி காங்கிரஸ் பெற்றுத் தரும்' என அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.இது குறித்து கார்கே கூறியிருப்பதாவது: வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ., அரசு பலமுறை பொய் சொல்லி வருகிறது. மக்கள் பிரதமரை புகழ்ந்தால், நாடு பேரழிவை நோக்கிச் செல்லும். நாட்டில் ஜனநாயகம் இருக்காது. காங்கிரசில் சில நபர்களை கட்சி தொண்டர்களும், மக்களும் இணைந்து பெரிய தலைவர்களாக ஆக்கியுள்ளனர். அவர்கள் மற்ற கட்சிகளுக்கு ஓடிப் போகின்றனர். இது கோழைத்தனமான செயலைத் தவிர வேற ஒன்றும் இல்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n8r0r7br&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாங்கள் பயப்பட வேண்டியதில்லை. பயந்தால் அழிந்து போவோம். ஒரு நாள் வெற்றி நமதே. நாட்டின் விவசாயிகளுக்கு எதிராக பா.ஜ., அரசு செயல்படுகிறது. தொடர்ந்து பொய்யான மோடி உத்தரவாதத்தால் முதலில் 750 விவசாயிகள் உயிரிழந்தனர். தற்போது நேற்று 1 விவசாயி உயிரிழந்தார். 3 பேர் ரப்பர் தோட்டாக்களால் கண்பார்வை இழந்துள்ளனர். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை (எம்.எஸ்.பி.,) சட்டப்படி காங்கிரஸ் பெற்று தரும். இவ்வாறு கார்கே கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

C.SRIRAM
பிப் 17, 2024 19:20

இந்த ஆள் கிரிமினல் பேர்வழி. வரி வருமானம் முழுதும் விவசாய பொருட்களுக்கு கொடுத்துவிட்டால் மற்றவற்றுக்கு என்ன செய்வது .


விடியல்
பிப் 17, 2024 15:48

உலக கோதுமை மார்க்கட்டில் கோதுமை விலை 20.5₹கிவோ அதே கோதுமைக்கு இந்த ஆண்டு ஆதார விலை 25₹/கிலோவுக்கு இந்திய அரசு அறிவித்து வாங்கி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் 4பொருட்களுக்கு மட்டுமே குறைந்த பட்ச விலை.இன்று இருபத்தைந்து விவசாய விளைபொருட்கள் இந்த குறைந்த பட்ச விலை உள்ளது.. மொத்த கோதுமை கொள்முதலில் எண்பது சதவீதம் அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் கொள்முதல் செய்துள்ளது உணவுக் கழகம். FCI.இதில் முக்கால் வாசிக்கும் மேலே இடைத்தரகர்கள் தான் இந்த கோதுமையை குறைந்த விலைக்கு வாங்கி ஏஜெண்ட் மூலம் FCI க்கு msp விலைக்கு விற்று கமிஷன் அடைகிறார்கள்


Duruvesan
பிப் 17, 2024 15:45

அட தெலுங்கானா கர்நாடகால அமுல் செய்யேன்


vbs manian
பிப் 17, 2024 15:36

ஏற்கனவே கியாரண்டீ என்று சொல்லி கர்நாடக தெலங்கானா கஜானா காலி. இப்போது நாடு முழுதும் காலி ஆகும்.


vbs manian
பிப் 17, 2024 15:24

பொருளாதாரத்தை நாசமாகும் முயற்சி. உலகில் எந்த நாட்டிலும் இது போன்று முட்டாள் தனமான முடிவு இல்லை. விளைச்சல் பருவநிலவரத்தை அடிப்படையாக கொண்டது. ஒரு வருடம் மழை நல்ல விளைச்சல். அடுத்த வருடம் மழை பொய்த்து விளைச்சல் பெரும் சரிவடையலாம். எப்படி சட்டப்படி ஆதார விலை கொடுக்க முடியும். ஏற்கனவே பொருளாதார வல்லுநர்கள் இது நாட்டின் பொருளாதாரத்தை புரட்டி போடும் என்று எச்சரித்துள்ளனர். காங்கிரஸ் என்று நாடு பற்றி கவலைப்பட்டது.


duruvasar
பிப் 17, 2024 15:13

இப்பத்தான் இந்த எம் எஸ் பி பற்றி இவருக்கு தெரியவந்ததா? ஏன் இதை பற்றி பாராளுமன்றத்தில் பேசவில்லை. அப்ப இவரு என்ன பஞ்சு மிட்டாய் விற்றுக்கொண்டிருந்தாரா ? 2008 இல் இந்த கோரிக்கை வந்த போதே அன்றைய காங்கிரஸ் கட்சி பிரதமர் மன்மோகன்சிங், இதை நடைமுறைப்படுத்தினால் வரும் காலங்களில் நாட்டின் மற்ற வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யமுடியாத நிலை ஏற்படும் என்பதால் அந்த கோரிக்கையை நிராகரித்தார் என்ற விவரமாவது இவருக்கு தெரியுமா ? இவர் செய்வது மட்டரகமான எதிர்மறை அரசியல்.


A1Suresh
பிப் 17, 2024 12:58

எவன் அப்பன் வீட்டு காசு ?


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 17, 2024 12:55

நாடு நாசமா போனாலும் பரவால்ல என்று நினைக்கும் கட்சி காங்கிரஸ் .........


Ganapathy
பிப் 17, 2024 12:36

அதுசரி 2007ல் உங்க அரசில் உங்க பிரதமர் மன்மோகன் இதை ஒத்துக்கொள்ள மறுத்தேன். மீண்டும் 2011ல் உங்க ஆட்சில உங்க பிரதமர் மன்மோகன் மீண்டும் உறுதியாக ஒத்துக்கொள்ள மறுத்தேன்? தன்னுடைய ஆட்சி இல்லேன்னா காலிஸ்தானிகளை தூண்டி நாட்டை நாசமாக்கும் கழிசடை காங்கிரஸ்.


vadivelu
பிப் 17, 2024 12:31

என்ன என்ன பொருளுக்கு என்ன என்ன விலை கொடுப்பீங்க என்று சொல்லுங்க, இப்பவே அதை குடுக்க சொல்லலாம், சும்மா உருட்டி விட கூடாது.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ