உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணம் இருந்தா மட்டும் பதக்கம் கிடைச்சுடுமா; கேட்கிறார் அபினவ் பிந்த்ரா

பணம் இருந்தா மட்டும் பதக்கம் கிடைச்சுடுமா; கேட்கிறார் அபினவ் பிந்த்ரா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'வெறும் பணத்தால் மட்டும் பதக்கங்கள் கிடைத்து விடாது; ஒலிம்பிக் போட்டி, பொருள் விற்பனை இயந்திரம் அல்ல' என ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா தெரிவித்தார். இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விளையாட்டு வீரர்கள் ஆணையத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார். அபினவ் பிந்த்ராவுக்கு பதவி வழங்கப்பட்ட நிலையில், இந்தியாவால் தங்கப்பதக்கம் வாங்க முடியாதது குறித்து அவர் கூறியதாவது:

பணம் இருந்தா போதாது!

பணத்தால் பதக்கங்கள் கிடைக்காது. இது விற்பனை இயந்திரம் அல்ல. விளையாட்டு வீரர்களுக்கு பணம் செலவழிப்பதை நிறுத்த வேண்டும் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. ஒலிம்பிக் போட்டி என்பது மிகவும் கடினமானது. பதக்கம் வெல்ல முடியாமல் போவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. திறமை கிட்டத்தட்ட குப்பைத் தொட்டியில் வீசப்படுகிறது.

விளையாட்டு வீரர்கள்

இந்திய விளையாட்டு வீரர்கள் ஏன் பின்தங்கினர் என்பற்கு என்னிடம் பதில் இல்லை. நாங்கள் இன்னும் நிறைய தங்க பதக்கங்களை வெல்ல முடியும் என கூறுவேன். என்னை பொறுத்தவரை சிறப்பாக செயல்பட மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த ஒலிம்பிக்கில் நமது விளையாட்டு வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டுள்ளனர். வினேஷ் போகத் விவகாரத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து போராடி கொண்டு இருக்கிறோம்.

பெருமை

நீரஜ் சோப்ரா செய்திருப்பது நம்பமுடியாத சாதனை. பாகிஸ்தான் வீரர் தகுதியான வெற்றியாளர். அதேநேரத்தில் நாம் அனைவரும் நீரஜ் சோப்ரா பற்றி மிகவும் பெருமைப்பட வேண்டும். தங்கம் பதக்கம் கிடைக்காமல் ஏமாற்றம் கிடைத்துள்ளது.இது பரவாயில்லை.ஏனெனில் ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை அப்படித்தான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

vbs manian
ஆக 12, 2024 15:31

இந்தியாவில் விளையாட்டு என்றால் கிரிக்கெட் மட்டுமே. மற்றவற்றை யாரும் சி ந்துவதில்லை. தனி ப்ட்ஜெட் ஒதுக்கி ஊக்குவிக்க வேண்டும். தேசிய மாநில விளையாட்டு போட்டிகள் நிறைய நடக்க வேண்டும். சிறந்த கோச்சிங் மையங்கள் அமைக்க வேண்டும். பல நாடுகளில் ஐந்து ஆறு வயதிலிருந்து பயிற்சி ஆரம்பம். ஒரு சிலர் ஆர்வத்தால் முன் வருகிறார்கள். அரசின் பங்களிப்பு முயற்சி பெரும் அளவில் இல்லை. பதக்கம் எப்படி varum.


Ramesh Sargam
ஆக 12, 2024 12:20

சீனா, ஜப்பான், அமேரிக்கா போன்ற நாடுகளில் விளையாட்டு ஒன்றே குறி என்று விளையாடுகிறார்கள். ஆனால், இங்கோ இன்ஜினியரிங், மருத்துவம், ஆர்ட்ஸ் என்று ஒரு படிப்பில் சேர்ந்து விளையாட்டு இரண்டாவதாக எடுத்து விளையாடுகிறார்கள். ஆனால் முன் கூறிய நாடுகளில் முழுக்கவனமும் விளையாட்டுதான். ஆகையால்தான் அவர்கள் அதிக பதக்கங்கள் பெறுகிறார்கள்.


RajK
ஆக 12, 2024 11:37

விளையாட்டு வீரர்களை மன நிலையில் எப்படி தயார் செய்வது என்பதை தோணியிடம் கொடுத்து விடலாம். அவர் பார்க்காத பிரஷர் இல்லை...


GUNA SEKARAN
ஆக 12, 2024 14:14

தோனி ஒரு ஊழல் வாதி. ஸ்ரீனிவாசனுடன் இந்திய சிமெண்ட்ஸுடன் கை கோர்த்து தவறாக பணம் சேர்த்தவர். திகில் ஒன்றே போதும் இதை உணர. வெளிப்படையான ஆதாரங்கள் இல்லையாயினும் ....நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உறையிடப்பட்ட கவரில் இருக்கும் 6 பேர்????


sundarsvpr
ஆக 12, 2024 11:35

எல்லோரும் திறைமைசாலிதான். சில நபர்கள் ஜொலிப்பார்கள். படிப்பில் முதல் பத்து ராங்க் வாங்குவதுபோல். எல்லோரும் படிக்க வலியுறுத்துவதுபோல் தேக பயிற்சி/ விளையாட்டிற்கும் வலியுறுத்தவேண்டும். திறமைக்கு எவ்வாறு மார்க் நிர்ணயம் செய்வதை வல்லுனர் கருத்துக்களை பெறலாம். பள்ளியில் மாணவர்கள் படிப்பில் ஒரே மதிப்பு எண் பெற்றால் தேக பயிற்சி/ விளையாட்டு திறன் கணக்கில் எடுத்துக்கொண்டு ரேங்க் கொடுக்கலாம். விளையாட்டிற்கு அதிகாலையில் எழுதல் இரவில் விரைவில் நித்திரைக்கு செல்லுதல் அவசியம். இரண்டும் இருந்தால் மனஅழுத்தம் குறையும் மூளை திறன் அதிகரிக்கும். பணம் ஒதுக்குதல் அவசியம் விளையாட்டு உபகரணங்கள் வாங்கிட.


அப்புசாமி
ஆக 12, 2024 11:13

இந்திய வீரர்களுக்கு அரசியல்வாதிகள் தரும் அழுத்தமே முதல் எதிரி. எப்பாத்தாலும் இவர் வாழ்த்து, அவர் வாழ்த்துன்னு உசுப்பேத்தியே அவிங்களை விளையாடும்போது டென்சன் படுத்திடறாங்க. அடுத்ததாக கிரிக்கெட் மக்களை பாழாக்குது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை