உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மிசோரமுக்குள் புகுந்து ஆயுதமேந்திய குழுவை வேட்டையாடும் மியான்மர் ராணுவம்

மிசோரமுக்குள் புகுந்து ஆயுதமேந்திய குழுவை வேட்டையாடும் மியான்மர் ராணுவம்

அய்ஸ்வால்: இந்திய- வங்கதேசம் -மியான்மர் சர்வதேச எல்லையை தாண்டி மிசோரமின் கிராமத்திற்குள் புகுந்த மியான்மர் ராணுவத்தினர் ஆயுதமேந்திய கும்பலை வேட்டையாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.நம் நாட்டின் பக்கத்து நாடான மியான்மரில், ராணுவ ஆட்சி நடக்கிறது. அந்நாட்டின் பல்வேறு இடங்களில், ராணுவத்திற்கும், ராணுவ ஆட்சியை எதிர்த்து வரும் ஆயுதமேந்திய குழுவினருக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. கடந்தாண்டு டிசம்பர் 30-ம் தேதி மிசோரமின், லாங்ட்லாய் மாவட்டத்தில் உள்ள துய்சென்ட்லாங் என்ற சர்வதேச பகுதியில் இரு தரப்புக்குமிடையே நடந்த மோதலில் ஆயுதகுழு தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் 151 மியான்மர் ராணுவ வீரர்கள் காயங்களுடன் மிசோரமுக்குள் தப்பி வந்தனர்.இந்நிலையில் நேற்று இந்திய -வங்கதேச - மியான்மர் நாடுகளின் சர்வதேச எல்லை பகுதியான மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டம் பாண்டுக்பங்கா என்ற கிராமத்திற்குள் 275 மியான்மர் ராணுவ வீரர்கள் அதிரடியாக புகுந்து ஆயுத மேந்திய கும்பலை தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.*************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை