வாசகர்கள் கருத்துகள் ( 25 )
அந்த விமானத்தின் பொறுப்பு அதிகாரி பயணிகளிடம் தாமதத்திற்கான காரணங்களை தெரியப்படுத்தி மன்னிப்பு கோரி இருந்தாலே மக்கள் சாந்தம் அடைந்து விடுவார்கள். தாமதமான நேரத்தில் அவர்களுக்கு டீ காப்பீ ஸ்னாக்ஸ் போன்றவை வழங்கிருந்தால் ஓரளவிற்கு சமாதானம் அடைந்திருப்பார்கள். "ACCEPT THE MISTAKE" என்ற தாரக மந்திரம் யாருக்கும் புரியவில்லை.
தவறுகளை சுட்டிக்காட்டினால் அது இமாலயக் குற்றமா ...???புரியவில்லை .....
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சலாமா...???,விமானக் கம்பெனிக்கு ஏற்கனவே பேர் ரிப்பேர்,இப்போ நோட்டீஸ் வேற....
இந்தியாவில் பெரும்பாலான விமான நிறுவனங்களை அரசாங்கம் நடத்தாமல் தனியாருக்கு தாரை வார்த்து விட்டனர்,தனியார் நிறுவனங்கள் நிச்சயம் பொறுப்பாகச் செயல்படவில்லை ,அரசாங்க நிறுவனம் என்றால் ஓரளவுக்கு சரியாக நடக்கும் .தனியார் நிறுவனங்கள் லாபகரமாகச் செயல்படவில்லை என்றால் இழுத்து மூடி விட்டுச் சென்று விடுவார்கள்,நினைத்தால் விமானம் ஓட்டுவார்கள் இல்லையேல் ரத்து செய்துவிடுவார்கள் .யாரும் தட்டிக் கேட்க முடியாது.தனியார் நிறுவனங்களை என்றும் எப்பொழுதும் நம்ப முடியாது.இந்த நிலையில் நாட்டில் உள்ள எல்லாவற்றையும் நஷ்டத்தில் இயங்குகிறது என்று கூறி தனியார் மயமாக்கினால் என்ன நடக்கும் ....???.
ரன் வே யிலே ஓரமா சமூசா, டீக்கடை தொறக்கலாமே. பயணிகள் நிறைய பேர் வாங்குவாங்க.
வாஷிங்டன் விமான நிலையத்தில் விமானத்தில் எறியபின் கடுமையான பனி பொழிவு காரணமாக நான்கு மணிநேரம் விமானத்தின் உள்ளேயே இருக்க வைத்தார்கள். தண்ணீர்கூட கொடுக்கவில்லை.பிறகு ஒருவழியாக விமானம் புறப்பட்டபின் நள்ளிரவில் உணவு வழங்கியதால் சாப்பிடவும் முடியவில்லை...(LUFTHANSA AIRLINES ON 16 ஜனவரி 2022 )
வளர்ந்த நாடுகளில் இது போல நடந்தால் கட்டாயம் நஷ்ட ஈடு கொடுத்து விடுவார்கள் ,இங்கே இந்தியாவில் விமானப் பயணியைக் கைது செய்கிறார்கள் ,விமானப் பைலட்டைத் தாக்கியது தவறு என்றாலும் ஏன் தாக்கினார் என்று ஆராய வேண்டும் ,மக்கள் எவ்வளவுதான் பொறுத்துக் கொள்வது....???புரியவில்லை ....
விமானப்பயணத்தில் பல சமயங்களில் கால தாமதம் செஞ்சு கொலைப்பட்டினி போட்டுவிடுவார்கள், பயணிகள் பசிச்சா என்ன செய்யறது,எங்கே சாப்பிடுவது ...???யார் உணவு கொடுப்பாங்க ...??? இதுதாண்டா இந்தியா .... இதுதான் வளர்ச்சி அடைந்த பாரதம் .... இதுதான் அமிர்தக் காலம் .....
ராஜன், உங்கள் காழ்ப்புணர்ச்சி தெரிகிறது, தனியார் விமான நிறுவனத்தின் செயலுக்கு ஒட்டு மொத்த பாரத்தையும் குறை சொல்வது உங்களின் வெறுப்பை காட்டுகிறது. பிடிக்கவில்லையென்றால் உங்களுக்கு பிடித்த நாட்டிற்கு சென்று சந்தோசமாக இருங்கள்.
அமெரிக்காவில் டாலரில் சம்பளம் கொடுக்குறாங்க ,இங்கே ரூபாயில் தானே கொடுக்குறாங்க .இரண்டையும் எப்படி ஒப்பிடுவதாம் ....
குறித்த நேரத்தில் புறப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைவோம் என்றுதானே சொல்லி விமானத்தை இயக்குகிறார்கள் இவர்கள். இந்த விமானத்தில் தற்போதைய சாதாரண வகுப்பு டிக்கெட் விலை ஐந்து மடந்து கூடி இருக்கிறது. எதற்காக அவ்வளவு ஏற்றினார்கள். கொள்ளையோ கொள்ளையல்லவா? விமானப்பயணிகளுக்கு ஏற்படும் அசைவுகரியங்களுக்கு வருந்துகிறோம் என்ற ஒற்றைவரியியில் கூறி பல இழப்புக்களை பயணிகள் ஏற்க வேண்டியிருப்பதற்கு ஒரு இழப்பீடும் தருவதில்லை இவர்கள். தார்மீக அடிப்படையில் விமணியை தாக்கியதற்கு வருந்துகிறோம் என்று பயணியர் சொல்லியவுடன் அவரை எந்த வித தொந்திரவு செய்யாமல் விமானத்தில் பயணிக்க சொல்வதே சரி. இவர்களுக்கென்றால் இரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளியா? விமானம் காலதாமதமாக இயங்குவதற்கு காரணம் கொள்ளையடிப்பதுதான். டில்லியிலிருந்து மிக குறைந்த வெளிச்சத்தில் கடும் மூடுபனியில் இயங்கவல்ல விமானங்களை இயக்கவெங்கிடும், அதற்கான பிரத்தியேக பயிற்சிகளை விமான நிறுவனம் வழங்க மறுக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பு இத்தகைய பயிற்சிக்கு விமானி ஒருவருக்கு மூன்று லக்ஷம் ருபாய் செலவாகும் என்றும் அதனால் ஒரு மாத கால சிக்கலுக்கு எதற்கு செலவு செய்யவேண்டும் என்று தனியார் நிறுவனங்கள் கவனம் செலுத்தவில்லை. ஏர் இந்தியா மட்டுமே மூடுபனியில் இயங்கவல்ல வல்லமை பெற்றிருக்கிறது. விமான டிக்கெட்டின் விலையை வைத்திருக்கும் விவாதமே இவர்களின் ஏமாற்று வேலைக்கு சான்று. விமானங்களிலிருந்து ஆம்னி பஸ் நிர்வகிப்போரும் அதன் பிறகு இந்திய ரயில்வேயும் டைனமிக் டிக்கெட் என்று விலையை கூட்டி கொண்டே சென்று கொள்ளையடிக்கும் வித்தையை அமல் படுத்துகின்றன. (அமல் ப்படுத்துவதா அல்லது அமுல் படுத்துவதா ? எது சரி?)
மேலும் செய்திகள்
புரோஸ்டேட் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
2 hour(s) ago
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
3 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
3 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
6 hour(s) ago | 11