உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமரின் பேச்சுகள் பிரிவினையை ஏற்படுத்தும்: மன்மோகன் சிங் கவலை

பிரதமரின் பேச்சுகள் பிரிவினையை ஏற்படுத்தும்: மன்மோகன் சிங் கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி பேசியது பிரிவினையை ஏற்படுத்தும்'', என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜனநாயகம், அரசியலமைப்பு பாதுகாக்கப்படும் போது, வளர்ச்சியடைந்த எதிர்காலத்தை காங்கிரசால் மட்டுமே தர முடியும். பஞ்சாப் வாக்காளர்கள் அன்பு, அமைதி, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்திற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். வளர்ச்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கு ஓட்டுப்போட வேண்டும்.இதுவரை எந்த பிரதமரும் இந்தளவுக்கு தரம் தாழ்ந்து, வெறுப்பு பேச்சுகளை ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்தும், எதிர்க்கட்சிகள் குறித்தும் பேசியது இல்லை.தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமரின் பேச்சு பிரிவினையை ஏற்படுத்தும்.அக்கறை இல்லாமல், பா.ஜ., அரசு அக்னிவீர் திட்டத்தை திணித்துள்ளது. இது, தேசத்திற்கான சேவை, தேசபக்தியின் காலம் 4 ஆண்டுகள் மட்டுமே என அக்கட்சி நினைக்கிறது. இது அவர்களின் போலி தேசியவாதத்தை காட்டுகிறது. நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த திட்டம், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்படும்.பஞ்சாபையும், பஞ்சாபியர்களின் கலாசாரத்தையும் பிரதமர் மோடி காயப்படுத்தி உள்ளார். நாட்டிற்கு, பிரதமர் ஏற்படுத்திய காயத்திற்கு காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி மருந்தாக இருக்கும். நாட்டில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் ஆகியன சமத்துவமின்மையை பெரிதும் விரிவுபடுத்தி உள்ளது. 47 ஆண்டுகளில் இல்லாத வகையில் மக்களின் சேமிப்பு குறைந்துள்ளது. காங்., ஆட்சிக்கு வந்தால் 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு மன்மோகன் சிங் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 64 )

sankar
ஜூன் 02, 2024 17:26

அன்னே - எதிரி வாளை சுழற்றிக்கொண்டு வெட்ட வரும்போது - நான் கேடயத்தை பயன்படுத்தியே ஆகவேண்டும் - அல்லது என் வாளையெடுத்து சும்மானாச்சும் சுழற்றவேண்டும் - அப்பத்தான் அவன் அடங்குவான் - முடியாத வாக்குறுதிகள் ஒருபக்கம், சிறுபான்மை வாக்குகளை கவர வேஷம் போடுவது ஒருபக்கம் என்று போகும்போது - உங்களை காக்க நான் இருக்கிறேன் என்று பெரும்பான்மை வாக்குகளை ஒருங்கிணைத்து வெற்றி காண்பதில் தவறு இல்லை - "நல்லவனாய் மட்டும் இருந்தால் போதாது, வல்லவனாகவும் இருக்கவேண்டும்"- பரமாத்மா கீதையில் சொல்வது -


spr
ஜூன் 02, 2024 07:14

பிரிவினையை ஏற்படுத்த வேண்டுமென்றே எண்ணி இவர்கள் திரும்பத் திரும்ப அதனையே கூறுகிறார்கள் அரசியல்வியாதிகள் தலையீடு இல்லையென்றால் இந்த நாட்டில் மக்கள் ஒற்றுமையாக அனுசரித்து, அரவணைத்து வாழ்வார்கள் "ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறது"


Nadanasigamany Ratnasamy
ஜூன் 01, 2024 20:59

எம்.ஜி. ஆரின் "தூங்காதே தம்பி தூங்காதே" என்ற பாட்டை இப்போதுதான் மன்மோகன்சிங் கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.


Sampath Kumar
ஜூன் 01, 2024 10:21

உங்க கவலை நியாயமான ஓன்று சார்


Lion Drsekar
மே 31, 2024 13:39

ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்கு அதிலாக பேசுவதற்கு , நற்கலியில் அமர்வதற்கு என்று நவராத்திரி கொலு பொம்மைகளைப்போல் சிலரை வைர்த்திருப்பார்கள் , அவர்கள் நிலை பரிதாபத்துக்குரியது . அவர்களுக்கு என்று சொந்தமாக தனது மதியை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தவே முடியாத நிலை, நிற்க முடியாத நிலை, பேச உடையாத நிலையிலும் அவர்களின் பங்கு இருப்பதை பார்க்கும்போதே தெரிகிறது , பரிதாபத்தை உச்ச நிலை, வந்தே மாதரம்


Jai
மே 31, 2024 09:17

மன்மோகன் சிங் அவர்கள் இது போன்று தைரியமாக பிரதமராக இருக்கும்போது பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மன்மோகன் சிங் அவர்களின் சேவையை மதிக்கும் விதமாக இந்த அரசு அவருக்கு பாரத ரத்னா வழங்கி உள்ளது. மன்மோகன் சிங் மூலம் இந்த அறிக்கையை விட்டு காங்கிரஸ் தலைமை இதை எப்படி சிறுமனதுடன் பார்க்கிறது என்று தெரிகிறது. பிரணாப் முகர்ஜி கூறியது எவ்வளவு சரியாக உள்ளது?


sankar
ஜூன் 02, 2024 17:27

இவரை மோசமாக விமரிசித்தவர் ராகுல்


Bharathi
மே 31, 2024 09:07

RIP CONGRESS


babu
ஜூன் 02, 2024 09:29

R.I.P all regional parties in Future India.


Mohan
மே 31, 2024 08:24

முதலில் தைரியமாக உங்க சொந்த கருத்துக்களை சொல்லுங்க ஜீ சோனியாம்மா இப்ப உங்களை மாதிரி மெளனம் காக்குறாங்க


RAJ
மே 31, 2024 08:15

மன்மோகன் அய்யா, உலகத் தலைவர்கள் மத்தியில நீங்க பம்முன்னு வீடியோ எல்லாம் இன்னும் வைரலா இருக்கு அய்யா... அமைதியா எப்பவும் போப்பா இருந்துருங்க.. இல்லாட்டா .. மக்கள் வெளுத்துவிட்ருவாங்கா அய்யா... ..


R SRINIVASAN
மே 31, 2024 07:43

Mr. மன்மோகன் சிங்க் என்னதான் நீங்கள் கரடியாக கத்தினாலும் இனி நேரு குடும்பமும் இத்தாலிய குடும்பங்களும் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியாது .இதை தெரிந்து கொண்டுதான் குலாம் நபி ஆசாத் அவர்கள் காங்கிரசை விட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்து சுயமரியாதையுடன் வாழ்கிறார்


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ