உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவியருக்கு பாலியல் தொல்லை தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

மாணவியருக்கு பாலியல் தொல்லை தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

மைசூரு: மாணவியரிடம் அநாகரீகமாக நடந்ததுடன் பாலியல் தொல்லையும் கொடுத்த தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.மைசூரு, நஞ்சன்கூடின், தாசனுாரு கிராமத்தில் தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக பணியாற்றிய பிரகாஷ், 50, மாணவியரை தொட்டுத் தொட்டுப் பேசுவதும், அநாகரீகமாக நடந்ததுடன் பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியர், தங்கள் பெற்றோரிடம் கூறினர்.கோபமடைந்த பெற்றோர், தலைமை ஆசிரியர் பிரகாஷ் மீது, கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதைத் தீவிரமாக கருதிய மாவட்ட கல்வித்துறை அதிகாரி, இதுகுறித்து, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில் இவர் மாணவியரிடம், தகாத முறையில் நடந்து கொண்டது உறுதியானது.எனவே பிரகாஷ் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வசதியாக, அவரை பணியிடை நீக்கம் செய்யும்படி உத்தரவிட்டார். இதன்படி அவரை பணியிடை நீக்கம் செய்து, அதிகாரிகள் நேற்று உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை