உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாமராஜேஸ்வர சுவாமி கோவிலை சுத்தம் செய்த பா.ஜ.,வினர்

சாமராஜேஸ்வர சுவாமி கோவிலை சுத்தம் செய்த பா.ஜ.,வினர்

சாம்ராஜ் நகர் : சாம்ராஜ் நகரின், சாமராஜேஸ்வர சுவாமி கோவிலை, பா.ஜ.,வினர் நேற்று மாலை சுத்தம் செய்தனர்.அயோத்தியில் ராமர் கோவில், வரும் 22ல் திறக்கப்படுகிறது. அன்று ராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதை முன்னிட்டு, நாடு முழுதும் கோவில்களை துாய்மை செய்யும்படி, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.இதன்படி பா.ஜ.,வினர், கோவில்களை துாய்மை செய்கின்றனர். சாம்ராஜ் நகரின், சாமராஜேஸ்வர சுவாமி கோவிலை, நேற்று மாலை பா.ஜ.,வினர் கழுவி துாய்மை செய்தனர். மாவட்ட பா.ஜ., தலைவர் நிரஞ்சன்குமார், மாநில துணை தலைவர் மகேஷ் உட்பட, பல தலைவர்கள், தொண்டர்கள் துாய்மை பணியில் பங்கேற்றனர்.நிரஞ்சன் குமார் கூறியதாவது:அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு, பிரதமரின் அழைப்பு படி கோவில்களை சுத்தம் செய்கிறோம். அன்றைய தினம், சாம்ராஜ் நகர் மாவட்டம் முழுதும், அனைத்து கோவில்களிலும், கட்சி தொண்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்வர்.அயோத்தி ராமர் கோவிலில் நடக்கும் பூஜைகள், நிகழ்ச்சிகளை அனைத்து கோவில்களிலும், நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்கிறோம். அன்றைய தினம் மாலை வீடுகளில் விளக்கேற்றும்படி, பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி கட்சி தொண்டர்கள் வீடு, வீடாக விளக்கேற்றும்படி உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை