உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரண்டாம் கட்ட தேர்தல் : வாக்காளர்களுக்கு மோடி நன்றி

இரண்டாம் கட்ட தேர்தல் : வாக்காளர்களுக்கு மோடி நன்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள பார்லிமென்ட் லோக்சபா தேர்தலில் கடந்த 19ம் தேதியன்று 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.முதற்கட்ட வாக்குப்பதிவின் போது பிரதமர் மோடி, இன்று வாக்களித்த முதன்முறை வாக்காளர்கள் இந்தியா முழுதும் தே.ஜ., கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கின்றனர் என்பது தெளிவாகிகறது என ‛ எக்ஸ்'தளத்தில் பதிவேற்றினார்.இந்நிலையில் இன்று நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடர்பாக பிரதமர் மோடி தனது ‛எக்ஸ் ' வலைதளத்தில் கூறியுள்ளது.இரண்டாம் கட்ட ஒட்டுப்பதிவு மிகவும் நன்றாக இருந்தது. இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றி. பா.ஜ., தலைமையில் நல்லாட்சியை வாக்காளர்கள் விரும்புகிறார்கள். மேலும் தே.ஜ. கூட்டணியை இளைஞர்கள், பெண்கள் வலுப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு மோடி தனது ‛எக்ஸ்' தளத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Google
ஏப் 26, 2024 22:35

bye bye Ji


Ramesh Sargam
ஏப் 26, 2024 21:04

உங்கள் முகத்திற்காக பலர் பிஜேபிக்கு வாக்களித்துள்ளோம் தலைவா இனி அந்த பிஜேபி கட்சியை சேர்ந்த MP -க்கள் மக்களுக்காக செய்யவேண்டிய சேவையை செய்யவேண்டும் நீங்கள்தான் அவர்களை நிர்பந்திக்கவேண்டும் தலைவரே நன்றி


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை