உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  டாக்டர் உமர் நபியின் வீடு தரைமட்டம்: தகர்த்து தள்ளியது பாதுகாப்பு படை

 டாக்டர் உமர் நபியின் வீடு தரைமட்டம்: தகர்த்து தள்ளியது பாதுகாப்பு படை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புல்வாமா: டில்லி வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான டாக்டர் உமர் நபியின் ஜம்மு - காஷ்மீர் வீடு, பாதுகாப்பு படையினரால் நேற்று முன்தினம் நள்ளிரவு வெடிமருந்து வைத்து தரைமட்டமாக்கப்பட்டது. டில்லியில் உள்ள செங்கோட்டையில் போக்கு வரத்து சிக்னலில் நின்றிருந்த கார் ஒன்று, கடந்த 10ம் தேதி வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் காரை இயக்கிய டாக்டர் உமர் நபி உட்பட, 13 பேர் பலியாகினர்; 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பயங்கரவாத தாக்குதல் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது-. தாக்குதலில் ஈடுபட்ட உமர் நபி, பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் டாக்டராக பணியாற்றியதும், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. தாக்குதலைத் தொடர்ந்து, புல்வாமாவின் கோய்ல் கிராமத்தில் உள்ள உமரின் வீட்டில் பாதுகாப்பு படையினர், கடந்த சில நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். இதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன; வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஜெய்ஷ் - இ - முகமது உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகளுடன் அவர் தொடர்பில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இந்த சூழலில், அவரது வீட்டுக்கு போலீசார், சி.ஆர்.பி.எப்., எனப்படும் துணை ராணுவப் படையினர் அடங்கிய பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றனர். பின்னர், டாக்டர் உமரின் வீடு பாதுகாப்பான முறையில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. முழு வீடும் தரைமட்டமானதை அடுத்து, கட்டட இடிபாடுகளில் தடயவியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். உமரின் வீடு குண்டு வைத்து தகர்க்க முடிவு செய்யப்பட்டதை அடுத்து, சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதையொட்டி, கோய்ல் கிராமம் மட்டுமின்றி புல்வாமா முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

சிந்தனை
நவ 15, 2025 22:15

இஸ்லாமியர்களின் கடைகளில் பொருளை வாங்கினால் அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் 10% இதுபோன்ற பயங்கரவாத செயல்களுக்கு போகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்


சிந்தனை
நவ 15, 2025 22:13

மதிப்புக்குரிய நீதிபதிகள் இனிமேல் அழத் தொடங்குவார்கள் இதெல்லாம் அநியாயம் என்று அரசின் மேல் நீதிபதிகள் வழக்கு தொடுக்க வேண்டும் ஏனென்றால் அவர்கள் நாட்டை அழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் சம்பளம் கொடுக்கிறார்கள்...


Sridhar
நவ 15, 2025 16:38

இந்த நிகழ்வு கூடியவரை சுப்ரீம் கோர்ட்டின் கண்களில் படாமல் இருக்கவேண்டும்.


Sivasankaran Kannan
நவ 15, 2025 15:19

அந்த யூனிவர்சிட்டி தாளாளர் ஒரு தீவிர வாதி போல தெரிகிறது. நன்கு விசாரித்த பின் காங்கிரஸ் ஏன் அவ்வளவு நிலம் கொடுத்தது என்று கண்டு பிடித்து லாடம் காட்டுங்கள். நிலத்தை திரும்ப அரசு எடுத்தது அங்கு உள்ள மற்ற மாணவர்களை வேறு இடத்தில் மாற்றுங்கள். இந்த தீவர வாடா கும்பல் எதற்கும் துணியும். அந்த யூனிவர்சிட்டி கட்டிடங்களையும் இடித்தத்து தள்ளுங்கள். துப்பாக்கி வைத்துக்கொள்ளும் இடமா அது.


bharathi
நவ 15, 2025 14:22

We need to expose all the anti nationals


Rathna
நவ 15, 2025 12:47

விஷ விதைகளை களை எடுப்பது மிக அவசியம். அது பல்கி பெருகி, நாகரீக உலகத்திற்கு எதிராக செயல்படும் வரை. இது பாகிஸ்தானிய பங்களாதேஷி ஏஜென்ட்களின் வேலை. துருக்கி, பாக்கிஸ்தான், துபாய், கத்தார், ஆப்கானிஸ்தான் கிருமிகளால் நடத்தப்படும் மறைமுக போர். நீங்கள் வாங்கும் ஒவ்வரு பொருளிலும் தீவிரவாதம் உள்ளது. டொனேஷன் மூலம் வியாபார லாபத்தின் மூலம் பணம் பறிக்கப்பட்டு அதை தீவிரவாததிற்காக பயன்படுத்த படுகிறது. அல் பாலாஹ் என்ற யூனிவர்சிட்டி போர்வையில் பணம் வெளிநாடுகளில் இருந்து ஹவாலா மூலம் கொண்டு வரப்பட்டு ஒரு சமுதாய மக்களை மட்டும் குறி வைக்கும் ரத்த காட்டான்களை வானுலக கன்னிகளுக்கு அனுப்புவதே முறை. அதுவே அவன்களின் ஆசை. அல் பாலாஹ் என்ற யூனிவர்சிட்டி தீவிரவாதி டாக்டர்கள் 15 பேர் மொபைல் போனை ஆப் செய்து விட்டு தப்பிக்க முயற்சி செய்கிறான்.


Madras Madra
நவ 15, 2025 12:46

தமிழகத்திலும் அப்படி இடிக்க வேண்டிய வீடுகள் பல உள்ளன


நிக்கோல்தாம்சன்
நவ 15, 2025 12:41

dr. என்று போடுவதை காட்டிலும் Md. mohammad அல்லது Tt terrorist என்று போடலாமா , ஒரு கருத்தாக கேட்கிறேன்


1968shylaja kumari
நவ 15, 2025 12:20

அந்த இடத்தில இந்துக்களை குடியமர்த்தவேண்டும்


arunachalam
நவ 15, 2025 11:08

சபாஷ் நல்ல செயல். தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு அவர்கள் உறவினர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை