உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிகளை மறந்து விட்டு கூட்டாளிகளுக்கு ஆதரவா?: அகிலேஷ் கோபம்

விவசாயிகளை மறந்து விட்டு கூட்டாளிகளுக்கு ஆதரவா?: அகிலேஷ் கோபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்காமல், கூட்டாளிகளுக்கு அதிக நிதி கொடுக்கப்பட்டுள்ளது' என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடியுள்ளார்.மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது நிருபர்களிடம் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: நாங்கள் அனைவரும், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் வகையில் குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தோம். ஆனால் இங்கு விவசாயிகளைக் காட்டிலும், பா.ஜ., அரசு தனது கூட்டாளிகளுக்கு அதிக நிதி கொடுத்துள்ளது.

பணவீக்கம்

இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. அவர்கள் இன்டர்ன்ஷிப் முடிந்த பிறகு என்ன செய்வார்கள்?. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நடுத்தர வர்க்கத்தினருக்கு நீங்கள் சில சலுகைகளை அளித்தாலும், பணவீக்கம் காரணமாக நீங்கள் அதை திரும்பப் பெறுகிறீர்கள். பட்ஜெட்டில் உத்தரபிரதேசத்திற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை. மத்திய பட்ஜெட் வெறும் நாடகம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

siva
ஜூலை 25, 2024 06:26

அரசியலில் கூட்டாளிகளுக்கு ஆதரவு அளிக்கத்தவறியமையினால் தான் அகிலேச்சுக்கு இந்த நிலமை, தன்னை பிரதமர் பதவிக்கு அகிலேசு யாதவ் முன்னிறுத்தவேண்டும். அகிலேணு யாதவ்வுக்கு தன் பலம் புரியவில்லை.


M Ramachandran
ஜூலை 24, 2024 21:28

யாரெல்லாம் விவசாயிகளுக்காக பேசுவது என்று வரைமுறையில்லாமல் கேலி கூத்தாகி விட்டது


Nandakumar Naidu.
ஜூலை 24, 2024 21:25

இவரும், இவர் கட்சியும், இவரது கூட்டணியும் இந்தியாவின் சாபக்கேடு.


bal
ஜூலை 24, 2024 20:24

இந்த அகிலேஷ் குடும்பம் ஊரை கொள்ளை அடித்தவர்கள்தானே. இப்போ என்ன பப்புகூட சேர்ந்து கூத்தடிக்குது.


C.SRIRAM
ஜூலை 24, 2024 19:31

உண்மையிலே பொறியியல் பட்டதாரியா ?. ஒரே உளறல் மயம்


அஜய் சென்னை இந்தியன்
ஜூலை 24, 2024 16:04

அவர் அவர் மாநிலத்தில் சிறந்த ஆட்சியை கொடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு மத்திய அரசை எதிர்த்தால், பதிலுக்கு மத்திய அரசு இதை தான் செய்யும்.


Palanisamy Sekar
ஜூலை 24, 2024 14:27

விவசாயிகளை இவரது தோப்பனார் காலத்தில் எப்படையெல்லாம் சீரழித்தார்கள் என்று உ பி விவசாயிகளை கேட்டுப்பாருங்கள் அப்போ தெரியும். இப்போ நீலிக்கண்ணீர் நடிக்கின்றார். திறன் மேம்பாட்டு திட்டம் என்பதே சுயமாக தொழில் செய்ய முயற்சிக்கலாம். அடிப்படையே தெரியாமல் புலம்புவது இந்தி கூட்டணியினரின் அரசியல் பிழைப்பாக உள்ளது. புதிய மாநிலத்தின் தலைநகருக்கு ஒதுக்கீடு என்பது முன்னமே ஒப்புக்கொண்ட உறுதிமொழி. அதனால்தான் அமராவதி தலைநகருக்கு மேம்பட நிதி ஒதுக்கீடு செய்தார்கள். அமராவது இந்தியாவில் இருப்பது என்பது உண்மையென்றால் அதனை எதிர்ப்பவர்கள் தேசவிரோதிகளாகத்தான் இருப்பார்கள். வறுமையில் இருக்கும் பீகாரின் மேம்பாட்டுக்கு இந்த நிதி ஒதுக்கீடு போதாது என்றாலும் கூட அதனை வரவேற்கும் நிதீஸுக்கு வாழ்த்துக்களை சொல்லுங்கள். எரிச்சலில் புலம்புவதை விட்டுவிட்டு நாடு மேம்பாடு காண்பதில் பாஜகவின் முயற்சியை குறை சொல்லாதீர்கள்


மோகனசுந்தரம்
ஜூலை 24, 2024 13:50

உன்னுடைய காட்டில் மழை அடித்து விடு ராஜா அடித்து விடு.


Barakat Ali
ஜூலை 24, 2024 13:28

கூட்டணி தர்மம் ன்னு ஒன்னு இருக்கிறதை வசதியா மறந்துட்டு பேசுறீங்க அகிலேஷ் ஜி .... கூட்டணி கட்சிகளுக்காக வளைஞ்சு கொடுக்குது பாஜக ன்னு ஓவரா விமர்சனம் பண்ணிக்கிட்டே இருந்தா உங்க மெகா கூட்டணி ஆந்திரா, பீகார்ல ஊத்திக்கவும் வாய்ப்பிருக்கு ....


S SRINIVASAN
ஜூலை 24, 2024 13:27

what a big drama


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை