உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுவாமியே சரணம் ஐயப்பா-22: தினம் ஒரு தகவல்: ஆதாரம் நீ தானய்யா

சுவாமியே சரணம் ஐயப்பா-22: தினம் ஒரு தகவல்: ஆதாரம் நீ தானய்யா

நம் உடலில் மூலாதாரம்,சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, சஹஸ்ராரம் ஆகிய ஆதாரங்கள் உள்ளன. உடல், மனம், ஆன்மாவிற்கு முக்கியமான இந்த சக்கரங்களை குறிக்கும் விதத்தில் ஏழு சாஸ்தா கோயில்கள் உள்ளன. அவை பற்றி காண்போம். மூலாதாரம்: முதுகெலும்பின் அடிப்பகுதியில் உள்ளது. உயிர் இருக்கும் இடம் இதுவே. வாழ்க்கை இதில் இருந்தே தொடங்குகிறது. பாபநாசம் காரையாறு சொரிமுத்தய்யன் கோயில். இதை முதல் சாஸ்தா கோயில் என்பர். முன்வினை பாவத்தை போக்க சபரி யாத்திரையை இங்கிருந்தே தொடங்குவர். சுவாதிஷ்டானம்: வயிற்றின் அடிப்பகுதியில் உள்ளது. இன்பம், உணர்ச்சி, ஆனந்த சக்தியின் இருப்பிடம். இதுவே கலை, இசை, படைப்பாற்றலின் மையம். அச்சன்கோவிலில் பூரணை, புஷ்கலையுடன் தர்ம சாஸ்தா மகிழ்ச்சியுடன் அருள்புரிகிறார். மணிபூரகம்: வயிற்றின் நடுப்பகுதியில் உள்ளது. ஆற்றல், வீரம், மனவலிமையின் பிறப்பிடம். ஆரியங்காவு - களரி, வாள், வில் ஆகிய வீர சின்னங்களோடு இங்கு சாஸ்தா இருப்பதால் 'வீரசாஸ்தா' எனப்படுகிறார். அனாகதம்: இதயப் பகுதியில் உள்ளது. அன்பு, கருணை, பக்தி வெளிப்படும் இடம். குளத்துபுழை - இயற்கை எழில் கொஞ்ச பசுமையான காட்டில் அன்பு, கருணை கொண்டவராக சாஸ்தா இங்கு இருக்கிறார். விசுத்தி: தொண்டைப் பகுதியில் உள்ளது. குரல், இசை, சங்கீதம், ஜபம் இங்கிருந்தே தோன்றும். எருமேலி - பேட்டை துள்ளல், அபர்ண சங்கீதம் போன்ற பக்தி வெளிப்பாடு இங்கு நடைபெறும். ஆக்ஞா: புருவங்களுக்கு இடையே உள்ளது. மூன்றாவது கண், ஞானம், ஆன்மிக சிந்தனை உருவாகும் இடம். சபரிமலை - நீயே கடவுள் என்ற ஞானத்தை வழங்கி உண்மையை ஐயப்பன் உணர வைக்கிறார். சஹஸ்ராரம்: தலையின் உச்சியில் உள்ளது. ஜீவாத்மாவாகிய நாம் ஒளி வடிவில் பரமாத்வாவை பார்க்கும் இடம் இது. காந்தமலை - காந்தமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதியை பார்க்கலாம். அதாவது ஐயப்பனை ஒளி வடிவில் தரிசிக்கும் இடம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்