உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைச்சரின் வீட்டை தாக்கிய மாணவர்கள்

அமைச்சரின் வீட்டை தாக்கிய மாணவர்கள்

ஐதராபாத்: ஆந்திராவில் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி பல்க‌லை. மாணவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். பின்னர் அம்மாநில அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். ஆந்திராவின் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சராக உள்ள பொன்னானலட்சுமணய்யாவின் வீடு வாராங்கல் மாவட்டத்தில் உள்ளது. ‌இன்று காலை காகாத்தியா பல்கலை. மாணவர்கள் ‌தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்க ஆதரவு தெரிவித்து அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரி, ‌ஜெய் தெலுங்கானா என கோஷமிட்டபடி முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். எனினும் வீட்டில் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் இல்லை. இதனால் அமைச்சர் தப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை