உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டுச்சாவடியில் வாக்காளரை எம்.எல்.ஏ., தாக்கியதால் பரபரப்பு

ஓட்டுச்சாவடியில் வாக்காளரை எம்.எல்.ஏ., தாக்கியதால் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தெனாலி : ஆந்திராவில் ஒட்டு போட வந்த வாக்காளர் ஒருவருக்கும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கு இடையே ஓட்டுச்சாவடியில் அடிதடி சம்பவம் நடந்துள்ளது ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் பல்வேறு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் ஒட்டளித்தனர்.இந்நிலையில், தெனாலி தொகுதியில் ஓட்டுச்சாவடி ஒன்றில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்திருந்தனர். அப்போது ஆளும் ஒய்.எஸ்.ஆர்.,காங். கட்சி எம்.எல்.ஏ., சிவக்குமார் வரிசையில் நிற்காமல் சென்றார். அவரை இடைமறித்த வரிசையில் வருமாறு கூறினார்.இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ., சிவக்குமார் வாக்குவாதம் செய்தார். பின் வாக்காளரை கன்னத்தில் அறைந்தார்.பதிலுக்கு வாக்காளரும் எம்.எல்.ஏ.,வை திருப்பி தாக்கினார். பின்னர் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கி கொண்டனார். அங்கு ஓட்டுப்போட வந்த பெண்கள் அலறியடித்து ஓடினர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர் சமரசப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

subramanian
மே 14, 2024 22:05

நீதிமன்றம் ஒரு வாரத்தில் இதற்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்க வேண்டும் எம் எல் ஏ, எம்பி, அமைச்சர், முதல்வர் இவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும் வாய்தா கொடுக்க கூடாது அனைத்து செலவுகளையும் இவர்கள் ஏற்க்க வேண்டும்


Kasimani Baskaran
மே 14, 2024 06:55

வரிசையில் நிற்க வேண்டும் என்பது கூட தெரியாமல் இருக்கும் காட்டுமிராண்டிகள்


D.Ambujavalli
மே 14, 2024 06:20

வாக்காளர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டியவர் விதிகளை மீறி, வாக்களிக்க வந்தவரைத் தாக்கியது கேவலமானது இதனால் வாக்களிக்காமல் சென்றவர்களின் வாக்குகள் நஷ்டம் ஆகி உள்ளது தேர்தல் கமிஷனும் இவர் மேல் வழக்குத்தொடுக்க வேண்டும்


Dharmavaan
மே 14, 2024 04:23

வாக்காளர் திருப்பி தாக்கியது சரியே


J.V. Iyer
மே 14, 2024 04:14

ஏற்கவனவே MLA, MP, மற்றும் அமைச்சர்களுக்கு தனி சட்டம் இப்போது ஏவல்துறை இருக்கும்போது இவர்கள் ஏன் இப்படி? நாடு குட்டிச்சுவர் ஆகிவிட்டது


Krishna Ramachandran
மே 13, 2024 23:10

நாட்டில் தேர்தலில் ஜெயித்து எம் எல் ஏ, எம் பி யாக இருப்பவர்களில் முக்கால்வாசி பேர், அய்க்கிய பயல்களாகத்தான் இருக்கிறார்கள்


நிக்கோல்தாம்சன்
மே 13, 2024 21:32

சிவகுமார் ன்ற பெயர் வைத்தாலே ஒரு மாதிரியாதான் இருப்பாங்களோ?


sankaranarayanan
மே 13, 2024 21:06

ஒய் எஸ் ஆர் காங்கிரசு எம்எல்ஏ க்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் எப்படி அவர் வரிசையில் நின்று முன்மாதிரியாக இல்லாமல் அடியாள் போன்று வரிசையில் நிற்பவர்களை தாக்குவது இவருக்கு ஏழு வருஷமாவது கடுங்காவல் கொடுத்து இனி தேர்தலில் நின்று போட்டியிடவே அருகதை அற்றவர் என்றே தேர்தல் ஆணையம் இவரை தண்டிக்க வேண்டும் இது நாட்டிற்கே ஓர் உதாரணமாகும்


Kumar Kumzi
மே 13, 2024 21:04

MLA என்றல் கொம்பு முளைத்தவனா அந்த வாக்காளர் செய்தது மிகவும் சரியானதே


Ramesh Sargam
மே 13, 2024 20:21

ஒய்எஸ்ஆர்,காங் கட்சி எம்எல்ஏ, சிவக்குமார் செய்தது தவறு அவன் முதலில் சரியாக தண்டிக்கப்படவேண்டும் அவனுக்கு சரியான தண்டனை மக்கள் அவனுக்கு இனிமேல் தேர்தலில் வோட்டு போடக்கூடாது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை