மேலும் செய்திகள்
மேலும் 9 சார்ஜிங் நிலையம் அமைக்க அரசு திட்டம்
57 minutes ago
இன்று இனிதாக .... (09.11.2025) புதுடில்லி
1 hour(s) ago
நாட்டை விட ஓட்டு முக்கியமா? ஒமருக்கு பா.ஜ., கண்டனம்
2 hour(s) ago
பெங்களூரு : சின்னசாமி விளையாட்டு அரங்கில், இன்று டி-20 கிரிக்கெட் போட்டி நடப்பதால், பயணியரின் வசதிக்காக, மெட்ரோ ரயில் போக்குவரத்து நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:பெங்களூரின், சின்னசாமி விளையாட்டு அரங்கில் இன்று டி 20 கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. இதை காண ஆயிரக்கணக்கானோர் வருகை தருவர். இவர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில்களின் போக்குவரத்து நீட்டிக்கப்படுகிறது. பச்சை மற்றும் ஊதா பாதைகளில் நான்கு டெர்மினல்களிலும், இன்று இரவு 11:45 மணிக்கு கடைசி ரயில் புறப்படும்.கிரிக்கெட் பார்த்துவிட்டு திரும்பும் போது, டிக்கெட் வாங்க பயணியர் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுவதை தவிர்க்க, முன் கூட்டியே காகித டிக்கெட் வாங்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 2:00 மணியில் இருந்து, காகித டிக்கெட் விற்கப்படும். காகித டிக்கெட்களை பயன்படுத்தி, இரவு 8:00 மணி முதல், கப்பன் பூங்கா மெட்ரோ நிலையம், எம்.ஜி., சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, மற்ற இடங்களுக்கு பயணிக்கலாம்.காகித டிக்கெட் விலை 50 ரூபாயாகும். கியூஆர் கோட் டிக்கெட்டுகள், வழக்கமான கட்டணத்தை விட, ஐந்து சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும். இதை வாங்கினால், நாள் முழுதும் பயணிக்கலாம். வாட்ஸ் ஆப், பே.டி.எம்., செயலிகளில் கியூஆர் கோட் டிக்கெட் வாங்கலாம். ஸ்மார்ட் கார்டுகளையும் பயன்படுத்தலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
57 minutes ago
1 hour(s) ago
2 hour(s) ago