உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதியவரை நெருப்பில் நடனமாட வைத்து சித்ரவதை

முதியவரை நெருப்பில் நடனமாட வைத்து சித்ரவதை

தானே :மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் முர்பாத் தாலுகாவில் உள்ள கர்வேலே கிராமத்தை சேர்ந்தவர் பவர்தே, 75. சூனியம் செய்தல், பேய் ஓட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இவர் மீது அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்தனர். இந்நிலையில் சமீபத்தில் அந்த பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடந்தது. வீட்டில் இருந்த முதியவர் பவர்தேவை, 20 பேர் கும்பல் சரமாரியாக தாக்கி வெளியே இழுத்து வந்தனர்.நெருப்பை எரிய செய்து, அதன் மீது ஏறி நடனமாடி, சூனியத்தில் ஈடுபடவில்லை என்பதை நிருபிக்கும்படி, அந்த முதியவரை வற்புறுத்தினர். இதில், முதியவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை