உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "இண்டியா கூட்டணி என்பது வாரிசுகளின் கூட்டணி": மத்திய அமைச்சர் தாக்கு

"இண்டியா கூட்டணி என்பது வாரிசுகளின் கூட்டணி": மத்திய அமைச்சர் தாக்கு

புதுடில்லி: 'இண்டியா கூட்டணி என்பது சுயநலம் சார்ந்த கூட்டணி. இந்த கூட்டணியில் வாரிசு அரசியலில் ஈடுபடுவர்களே உள்ளனர்' என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கடுமையாக சாடியுள்ளார்.இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அரசியல் சட்டத்தின் கண்ணியத்தை நிலைநாட்டுவது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கடமை. ஆனால் அவர் அதை கடைபிடிக்கவில்லை. மக்கள் மூன்றாவது முறையாக மோடியை பிரதமர் ஆக்க முடிவு செய்துள்ளனர். இதற்குக் காரணம் அவர் நாட்டிற்காக பாடுபட்டு உள்ளார். இண்டியா கூட்டணி என்பது சுயநலம் சார்ந்த கூட்டணி. இந்த கூட்டணியில் வாரிசு அரசியலில் ஈடுபடுவர்களே உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். ராகுலின் 2 பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை மணிப்பூரில் துவங்கி, இன்று மும்பையில் நிறைவடைகிறது. இது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, '' இண்டியா கூட்டணியினரின் போட்டோ ஷூட் பீஹார் மாநிலம் பாட்னாவில் துவங்கியது. தற்போது இந்த போட்டோ ஷூட் மும்பையில் நிறைவடையும்'' என பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

gayathri
மார் 18, 2024 10:31

இதிலேயே பொய். நீங்களும்தான் வாரிசு அரசியலின் அங்கம்.


T.sthivinayagam
மார் 17, 2024 20:09

என்டியே கூட்டனி வாரிசுகள் என்ன அனாதை ஆசிரமீ நடத்துகிறார்கள் இல்ல ஆன்மீக துறவி ஆகிவிட்டார்களா அவர்களும் அரசியலில் தானே இருக்கிறார்கள் என மக்கள் கேட்கின்றனர்


sankar
மார் 18, 2024 13:13

நித்தம் ஒரு ஊழலில் நீந்தி வந்த முந்தய அரசை பார்த்துக் கொண்டுதான் இருந்தோம் - மறக்கவில்லை மக்கள்


சோமசேகர்
மார் 17, 2024 18:57

அடுத்த பிரதமரா இந்தியாவிலிருந்து யாரும் வரமுடியாது கோவாலு. எல்லோரும் மோடியின் பரிவார் கோவாலு. நான் வந்தாலும் அவரோட குடும்பம்தான் கோவாலு. வாரிசுதான் கோவாலு. அமரிக்கா, ஆப்ரிக்காவிலிருந்து யாராவது வந்தால்தான் உண்டு கோவாலு.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 17, 2024 21:52

உளறலின் எல்லை ....


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 17, 2024 18:56

முதல்வர் ஸ்டாலின் சொன்னது "தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகளைக் குறையாக, குற்றமாகச் சொல்லிக்கொண்டிருந்த பா.ஜ.,வின் செயல்பாடு என்ன என்பதும், அது யார்... யாரிடம் எதற்காக நெருக்கடி கொடுத்து தேர்தல் நிதியைப் பெற்றுள்ளது என்பதும் கவனத்திற் குரியது. கையும் களவுமாக சிக்கியுள்ளது பா.ஜ.க." எங்களை மிரட்டி வாங்கினார்கள் என்று சொல்லவில்லை ..... மற்ற அனைத்தையும் சொல்லிவிட்டார் .....


தமிழ்
மார் 17, 2024 18:14

அவங்களுக்கு வாரிசு இருக்கும். அரசியல் பன்றாங்க.


Oviya Vijay
மார் 17, 2024 17:35

அமித்ஷா மகன் ஆதாயம் தரும் பதவியில்... எடியூரப்பா மகன் மாநில கட்சி தலைவர் பதவியில்... வாரிசு எங்கதாம்பா இல்லை... நீங்க அறிவிச்ச வேட்பாளர்கள்ளயே எத்தனையோ வாரிசுகளுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கீங்க... இங்க யாருமே ஒழுங்கு இல்லையே... நாம ஒழுங்கா அப்படின்னு தெரிஞ்சுக்கிட்டு பேசணும்...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை