உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீடியோ வெளியிட்டார் ஜக்கி வாசுதேவ்

வீடியோ வெளியிட்டார் ஜக்கி வாசுதேவ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மூளை அறுவை சிகிச்சை செய்து கொண்ட, ஜக்கி வாசுதேவ், குணமடைந்து வரும் நிலையில் அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், ஆன்மிக குருவுமான ஜக்கி வாசுதேவுக்கு கடும் தலைவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவரது மூளையில் ரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து டில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வினித் சூரி தலைமையிலான நான்கு டாக்டர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 17ம் தேதி அறுவை சிகிச்சை செய்தனர்.இதனால் அவரது மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு நிறுத்தப்பட்டது. சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்தார். இந்நிலையில் ஜக்கி வாசுதேவ் மருத்துவமனையில் நாளிதழ் வாசிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இதனை சத்குரு தனது ‛ தனது ‛‛ எக்ஸ்'' வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை