உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா.,சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்காத காரணம் என்ன?

மஹா.,சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்காத காரணம் என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' பருவமழை, பாதுகாப்பு படையினரின் தேவை உள்ளிட்டவற்றை காரணமாக மஹாராஷ்டிரா சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கவில்லை'', என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறியுள்ளார். காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டசபைக்கு தேர்தல் நடக்கும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த முறை, ஹரியானா உடன் இணைந்து மஹாராஷ்டிரா சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதனால், மஹா., மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது குறித்து எந்த தகவலும் இல்லை.இதற்கான காரணம் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறியதாவது: கடந்த முறை, ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் சேர்ந்து நடத்தப்பட்டது. காஷ்மீர் தேர்தல் நடக்கவில்லை. இந்த ஆண்டு நான்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இது முடிந்த உடன் அடுத்தபடியாக ஐந்தாவது மாநிலத்திற்கு தேர்தல் நடக்கிறது. படைகளின் இருப்பை கருத்தில் கொண்டு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தலை முதலில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மஹாராஷ்டிராவில் மழை காரணமாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தாமதமாகி உள்ளது. அங்கு வரிசையாக பண்டிகைகள் வருகின்றன. அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த பிறகு, அங்கு தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு ராஜிவ் குமார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

K.n. Dhasarathan
ஆக 16, 2024 21:25

தேர்தல் ஆணையம் வெளிப்படை யாக இல்லை, உண்மையாக இல்லை, எந்த நீதி விசாரணையும் பொறுப்போடு நடத்தப்படவில்லை,ஆர்.கே. நகர் தொகுதியில் புகார்கள் ஆதாரத்தோடு கொடுக்கப்பட்டு எத்தனை வருடங்கள் ஆயின ? ஏன் பதில் இல்லை? நீதி மன்றம் சென்றால் மானம் போகாதா ? அடுத்து, பஞ்சாபில் சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரி ஊழல் செய்து, வீடியோ வில் மாட்டி, நீதிமன்றம் வரை சென்றும் தேர்தல் ஆணையம் அவரை சுதந்திரமாக விட்டு விட்டது ஏன் ? பதில் சொல்ல முடியுமா தலைமை அதிகாரி ?


Narayanan Muthu
ஆக 16, 2024 20:26

பிஜேபிக்கு தேர்தல் பயம்தான் காரணம். மஹாவிகாஸ் கூட்டணி மிக பலமாக உள்ளது. பிஜேபியின் எஜமானர்கள் உள்ள நாக்ப்பூரிலேயே மண்ணை கவ்வுவது உறுதி.


ஆரூர் ரங்
ஆக 17, 2024 12:11

அப்போ காஷ்மீரில பலமா இருக்குன்னு சொல்றீங்க.


Easwar Kamal
ஆக 16, 2024 19:15

இன்னமும் பிஜேபி கூட்டணி முடிவு பண்ணலை. கூட்டணி முடிவு ஆனா உடன் பிரதமர் ரோடு ஷோ எல்லாம் பார்த்து பின்னர் பிரிதமர் வருகை எல்லாம் பார்த்து ரெண்டு அல்லது மூன்று கட்டமாக வைத்து பிஜேபி ஜெயிக்க முடியுமா எல்லாம் பார்த்து தன தேர்தல் தேதி அறிவாக முடியும். அதுக்குள்ள இப்படி அவசர பட்ட எப்படி?


S.Martin Manoj
ஆக 16, 2024 19:14

எஜமானர்களின் உத்தரவு


Duruvesan
ஆக 16, 2024 19:06

காரணம் அங்கு பிஜேபி டெபாசிட் வாங்குவது கடினம்.


தாமரை மலர்கிறது
ஆக 16, 2024 18:59

மழை காலத்தில் மக்கள் இன்னல் படுவார்கள். மேலும் அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரை அட்டகாசம் செய்வார்கள். அதனால் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை அடுத்தாண்டு நடத்தி கொள்ளலாம் என்ற முடிவு தீர்க்கதரிசனமாக முடிவு.


J.Isaac
ஆக 16, 2024 21:57

நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாக்கு


அரசு
ஆக 16, 2024 18:43

தேர்தல் ஆணையம் பாரதீய ஜனதா கட்சியின் கைக்கூலி. மகாராஷ்டிராவில் கட்டாயம் தோற்று விடுவார்கள் என்ற காரணத்தால் அங்கு தேர்தலை சந்திக்க திராணி இல்லை. இது ஜனநாயகப் படுகொலை.


vadivelu
ஆக 16, 2024 19:27

ஆதாரத்தோடு கேஸ் போடுங்க . சும்மா விடாதீங்க. மற்ற மாநிலங்களில் பா ஜா கா விற்க்குத்தான் வெற்றியா ? நாளைக்கே அறிவித்து விட்டால் என்ன ரிவீர்கள். உருட்டுவதிலும் நேர்மை வேண்டும்.


தத்வமசி
ஆக 16, 2024 19:41

திமுக நாற்பதுக்கு நாற்பது பெறும் போது மெசினும் தேர்தல் துறையும் நன்றாக வேலை செய்தது.


Narayanan Muthu
ஆக 16, 2024 20:23

தமிழ்நாட்டில் உங்கள் பருப்பு வேகாது.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை