உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரீல்ஸ் வீடியோ எடுத்த மனைவி: கணவர் தற்கொலை

ரீல்ஸ் வீடியோ எடுத்த மனைவி: கணவர் தற்கொலை

சாம்ராஜ் நகர்: 'ரீல்ஸ்' வீடியோ எடுத்த மனைவியால், கணவர் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.சாம்ராஜ் நகர் ஹனுார் பி.ஜி.பால்யா கிராமத்தில் வசித்தவர் குமார், 33. இவரது மனைவி ரூபா, 30. இவர் 'ரீல்ஸ்' வீடியோக்களை எடுத்து, சமூக வலை தளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோவை பார்த்து, குமாரின் நண்பர்கள் கேலி செய்து உள்ளனர். இதனால், “ரீல்ஸ் வீடியோ எடுக்க வேண்டாம்,” என, ரூபாவிடம், குமார் கூறி உள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை.கணவன், மனைவி இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மனம் உடைந்த குமார் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 'குமாரின் மரணத்துக்கு ரூபா, அவரது உறவினர்கள் யசோதா, கோவிந்தா ஆகியோர் தான் காரணம்' என, ஹனுார் போலீசில் குமாரின் பெற்றோர் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Bahurudeen Ali Ahamed
பிப் 21, 2024 20:06

கட்டிய கணவனை விட மற்றவர்களின் பாராட்டு முக்கியமாக போய்விட்டது, என்ன செய்ய. ரீல்ஸ் எடுப்பது தவறில்லை அது கண்ணியமாக கணவர் அல்லது மனைவியின் சம்மதத்தோடு இருந்தால் நல்லது,. குடும்ப வாழ்க்கை எல்லாவற்றையும் விட முக்கியம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை