மேலும் செய்திகள்
சபரிமலையில் ஜன.10 வரை தரிசன முன்பதிவு நிறைவு
2 hour(s) ago
ராகுல் கூட்டத்தை புறக்கணித்த சசி தரூர்
2 hour(s) ago
முஸ்லிம்கள் எனக்கு ஓட்டளிக்க மாட்டார்கள்!
2 hour(s) ago
1,000 ஆண்டு கோவிலை பாதுகாக்க வலியுறுத்தல்
3 hour(s) ago
ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலத்தில், இரண்டு குழந்தைகளுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து, பெண் தற்கொலை செய்து கொண்டார்.ராஜஸ்தானின் பலோத்ரா மாவட்டம் வலு கிராமத்தில் வசித்தவர் நாகத் கன்வர், 35. இவரது மகள் பூஜா கன்வர், 9, மகன் ஜோக் சிங், 7.நேற்று முன் தினம் மாலை, தன் இரண்டு குழந்தைகளுடன் நாகத் கன்வர், ஆழமாக தண்ணீர் தொட்டியில் குதித்தார். சற்று நேரத்தில், மூச்சுத் திணறி மூவரும் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் நடந்த போது, நாகத்தின் கணவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். வீடு திரும்பிய அவர், மனைவி மற்றும் குழந்தைகளைக் காணாமல் தேடினார்.அப்போதுதான் மூவரும் உயிரிழந்து தண்ணீர் தொட்டியில் மிதப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், மூன்று உடல்களையும் மீட்டனர்.நாகத் கன்வர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.உடற்கூறு ஆய்வுக்குப் பின், மூன்று உடல்களும் நேற்று, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago