உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் பேச்சை உன்னிப்பாக உற்றுநோக்கும் உலக நாடுகள்: ராஜ்நாத் சிங் பேச்சு

இந்தியாவின் பேச்சை உன்னிப்பாக உற்றுநோக்கும் உலக நாடுகள்: ராஜ்நாத் சிங் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: இந்தியா பேசுவதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில், நடந்த பேரணியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: கடந்த 2009ம் ஆண்டு நான் காஜியாபாத்தில் போட்டியிட வந்த போது, இது கடினமான தொகுதி என சொன்னார்கள். எங்கள் கட்சித் தலைவர்களும் என்னிடம், நீங்கள் கட்சியின் தேசியத் தலைவர் என்பதால் நீங்கள் காஜியாபாத்தில் போட்டியிட வேண்டாம். முந்தைய தேர்தலில் இந்தத் தொகுதியை நாம் இழந்தோம் என்றும் சொன்னார்கள். இருப்பினும், காஜியாபாத்துடன் எனக்கு பழைய உறவு இருந்ததால், இங்கிருந்து போட்டியிட முடிவு செய்திருந்தேன். காஜியாபாத்தில் நான் போட்டியிட்டால் மக்களின் ஆசிர்வாதம் நிச்சயம் கிடைக்கும் என்று எனது கட்சித் தலைவர்களிடம் கூறியிருந்தேன். அது நடந்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவை உலகம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.பிரதமர் மோடி தனது ஆட்சியின் போது அதிசயம் செய்தார். இந்தியா பேசுவதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது. எந்த பிரதமராலும் செய்ய முடியாததை, நமது பிரதமர் மோடி செய்தார். ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் பைடன் ஆகியோர் பிரதமர் மோடி தங்கள் நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். போரின் போது இந்திய மருத்துவ மாணவர்கள் உக்ரைனில் இருந்து பத்திரமாக நாடு திரும்பினர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

saravanan
ஏப் 03, 2024 22:42

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் என்ன நடந்தது? சீனா எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டால் தில்லியிலிருந்து நாராயணன் உடனே பெய்ஜிங் செல்வார் அங்கு கெஞ்சி கூத்தாடிய பின்பு ஒரு நன்னாளில் நல்ல முடிவு எட்டப்படும் இதுவே பாகிஸ்தான் என்றால் மெனமையான அணுகுமுறை பின்பற்றபடும் மோடி வந்த பிறகே நிலைமை தலைகீழாக மாறியது அடிக்கு அடி உதைக்கு உதை என்ற புராதன பழமொழியின் அடிப்படையில் அவரின் அணுகுமுறை இருந்தது கல்வான் பல்லத்தாக்கு சம்பவமாகட்டும் அ‌ல்லது தோக்லாம் முஸ்தீபு ஆகட்டும் மோடி எங்கேயும் சமரசம் செய்துகொள்ளவில்லை பிரதமரின் அந்த விவேகமும், வீரமும் உலக நாடுகளை ஆச்சரிய படுத்தியதில் வியப்பேதுமில்லை


செந்தமிழ் கார்த்திக்
ஏப் 03, 2024 14:24

உலகிலையே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா பல கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான மிக பெரிய மார்க்கெட் இந்தியா ஆகையால் உலக நாடுகளுக்கு இந்தியாவின் மீது கண் இருக்க தானே செய்யும் ஜெர்மனியும் அமெரிக்காவும் இந்தியாவின் சர்வாதிகார போக்கினை கடுமையாக கண்டித்து வருவதும் மக்களிடம் சொல்லுங்களேன் வெளியே உண்மையை சொல்ல திராணி உண்டா?


Kanagaraj M
ஏப் 03, 2024 13:51

வாயால் வடை சூடுபவர்களின் வாயைத்தான் பார்க்கவேண்டும் என்பது பழமொழி


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை