உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் 15 பேருக்கு மா.செ., பதவி?

இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் 15 பேருக்கு மா.செ., பதவி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அ.தி.மு.க.,வில் அமைப்பு ரீதியாக உள்ள 83 மாவட்டங்கள், 100 ஆக அதிகரிக்கப்பட உள்ளன. கூடுதலாக, 15 பேருக்கு மாவட்டச் செயலர்கள் பொறுப்பு வழங்கப்பட உள்ளது.அ.தி.மு.க.,வில் தற்போது, 82 மாவட்டச் செயலர்கள் உள்ளனர். மகளிர், இளைஞர் என, 17 அணிகளுக்கு மாநில செயலர்கள் உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., ஓட்டு சதவீதம், கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பெற்றதை விட குறைந்துள்ளது.அதனால், கட்சியை கட்டமைக்கும் வகையில், மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டச் செயலர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இரு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் என கூடுதலாக, 15க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் உருவாக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க.,வில் அமைப்பு ரீதியாக, 100 மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த வார இறுதிக்குள் புதிய மாவட்டச் செயலர்கள் பட்டியலை வெளியிட, அக்கட்சி பொதுச்செயலர் இ.பி.எஸ்., திட்டமிட்டுள்ளார். சசிகலா, பன்னீர்செல்வத்தை தீவிரமாக எதிர்ப்பவர்களுக்கு இப்பட்டியலில் முன்னுரிமை அளிக்கப்படவிருப்பதாக தெரிகிறது. அதேபோல, பன்னீர்செல்வத்துக்கு மறைமுக ஆதரவாக செயல்படுவோரின் பதவியை பறிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.புதிதாக நியமிக்கப்படுவோரில் பெரும்பாலானோர், இ.பி.எஸ்.,ன் தீவிர ஆதரவாளர்களாக இருப்பது போல பட்டியல் தயார் செய்யப்படுவதாக அக்கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ராமகிருஷ்ணன்
ஆக 21, 2024 14:58

இந்த தில்லாலங்கடி வேலை எல்லாம் ஓட்டுவங்கியை அதிகரித்து விடாது. கனவு காணாதீர்கள்


RAJA68
ஆக 21, 2024 14:58

போனியாகாத கட்சிக்கு எந்த பதிவை கொடுத்தால் என்ன. ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாமல் 40 இடங்களையும் இவரின் பிடிவாத குணத்தால் தாரை வார்த்தது தான் மிச்சம்


மோகனசுந்தரம்
ஆக 21, 2024 09:22

மாசெ வைத்துக் கொண்டு நாக்கு வழிக்க வா. துரோகத்தின் மொத்த உருவம் எப்படி எல்லாம் யோசிக்கிறான் பாருங்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை