உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., முப்பெரும் விழா: கமல் பங்கேற்காதது ஏன்?

தி.மு.க., முப்பெரும் விழா: கமல் பங்கேற்காதது ஏன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்தியன் 2, கல்கி படங்களுக்கு, 'டப்பிங்' பேசும் பணி இருந்ததால், தி.மு.க., முப்பெரும் விழாவில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.லோக்சபா தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில், கோவையில் முப்பெரும் விழா நடந்தது. அதில், தி.மு.க., கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். கமல் புறக்கணித்ததாக தகவல் பரவியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zqqoh03w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு, வீட்டு வசதி வாரியத்தலைவர் பூச்சி முருகன் ஆகியோர், நேற்று சென்னையில் கமலை, அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர். தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததற்கும், தனக்காக ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் பேசியதற்கும் டி.ஆர்.பாலு நன்றி தெரிவித்தார்.பின், விக்கிரவாண்டி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என, தி.மு.க., சார்பில், கமலுக்கு அழைப்பு விடப்பட்டது.இதுகுறித்து, மக்கள் நீதி மய்ய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கோவையில் நடந்த தி.மு.க., முப்பெரும் விழாவில், கமல் பங்கேற்க முடியவில்லை. அதற்கான காரணத்தை, தி.மு.க., தலைமையிடம் தெரிவித்துவிட்டு, கட்சியின் துணைத் தலைவர் மவுரியாவை அனுப்பி வைத்தோம். வரும் 22ம் தேதி, கல்கி படம் வெளியாகிறது. அப்படத்தில் நடித்துள்ள கமல், 'டப்பிங்' பேச வேண்டியது இருந்தது. அதேபோல், ஜூலை 12ல், 'இந்தியன் 2' படம் வெளியாகிறது.இரு படங்களுக்கும் டப்பிங் பேசும் பணி இருந்ததால், கோவைக்கு கமல் செல்ல முடியவில்லை. தி.மு.க., மீது எந்த அதிருப்தியும் இல்லை. விக்கிரவாண்டியில் நடக்கும் கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் கமல் பங்கேற்பார்.இதற்கிடையில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமாவளவன், தமிழச்சி தங்கபாண்டியன், துரை வைகோ, விஜய் வசந்த் உள்ளிட்ட, 11 எம்.பி.,க்கள் கமலை சந்தித்து, தங்கள் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

SKK
ஜூன் 19, 2024 17:30

Election பணம் இன்னும் கோடுக்க இல்லையோ?? என்ரு


K.Ramachandran
ஜூன் 19, 2024 17:26

அந்த ராஜ்ய சபா சீட் கிடைத்தா போதும் - இதுக்கு MNM ஒரு கட்சி வேற தேவையா


Kumar
ஜூன் 19, 2024 13:48

அவ்வளவுதான் வேலை முடிஞ்சிடுச்சு இல்ல கழட்டி விட்டுட்டாங்க இதெல்லாம் புரியல


Ms Mahadevan Mahadevan
ஜூன் 19, 2024 13:43

இருக்கிற கட்சிகள் போதாது? இவர் வேற கட்சி ஆரம்பித்து..... தனித்து நின்று 20 சதவிதவாக்கு வாங்கவில்லை என்றால் கட்சியை கலைத்து விட வேண்டும்


venugopal s
ஜூன் 19, 2024 13:25

கமலஹாசன் என்ன சரத்குமார் போல் ஒரு எம் பி சீட்டுக்காக ராவோடு ராவாக கட்சியை பாஜகவிடம் விற்று விட்டு இணைந்தது போல் திமுகவில் இணைந்து விட்டாரா?


Shekar
ஜூன் 19, 2024 14:02

இல்லியே, நாலு பட சான்ஸ், ராஜ்ய சபா எம்பி அப்டின்னுல அடகு வச்சிருக்கார். அடகு வைக்கிறதைவிட விக்கிறதே மேல்


Balamurugan
ஜூன் 19, 2024 16:15

அப்போ சரத்குமாருடன் ஒப்பிடும் அளவுக்கு தான் இருக்கிறார் கமலஹாசன். சரி தானே? கேட்டா உலக நாயகனாம். சரத்குமார் கமலுக்கு பல வருடங்களுக்கு முன்பே கட்சியை தொடங்கியவர்.


angbu ganesh
ஜூன் 19, 2024 10:36

கூப்பிடத்தானே அழையா விருந்தாளியா ...


enkeyem
ஜூன் 19, 2024 10:16

இனி ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கு ராஜ்ய சபா எம் பி? அல்வா கொடுத்துவிடுவார்கள். விரைவில் நாட்டைவிட்டு போகப்போகிறேன் என்று டயலாக் விடுவார்


Sampath Kumar
ஜூன் 19, 2024 10:00

ஆரிய கும்பல் நடத்தும் யாகத்துக்கு தலைமை ஏற்க போய்ட்டாரு


sankaranarayanan
ஜூன் 19, 2024 09:31

கமல் அடுத்துள்ள இந்த இரண்டு படங்களும் ஓடுமா அதாவது திரை அரங்குகளில் ஓடுமா அல்லது அரங்கை விட்டே ஓடிவிடுமா என்பதை இப்போது நிலவிவரும் அரசியல் சூழ்நிலையில் ஒன்றுமே சொல்ல முடியாது


selvelraj
ஜூன் 19, 2024 09:19

ஆமா இவர் விழாவில் கலந்துகிடாலும் அப்படியே விளங்கிடும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை