உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆளே இல்லாத நடிகர் சூர்யா வீட்டுக்கு பாதுகாப்பு: அமைச்சரின் பரிந்துரையில் கட்டணமின்றி சலுகை

ஆளே இல்லாத நடிகர் சூர்யா வீட்டுக்கு பாதுகாப்பு: அமைச்சரின் பரிந்துரையில் கட்டணமின்றி சலுகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆளுங்கட்சி அரசியல் வாரிசின் ஆசியுடன், இலவசமாக இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக, நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.நடிகர் சூர்யா நடிப்பில், 2021ல், ஜெய்பீம் திரைப்படம் வெளியானது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1dxwz4wy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜாதி வெறியை துாண்டும் விதமாக காட்சிகள் உள்ளதாக கூறி, படத்தின் இயக்குனர் ஞானவேல், தயாரிப்பாளர் ஜோதிகா, நடிகர் சூர்யா ஆகியோர் மீது, சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர் அலுவலகத்தில், பா.ம.க., நிர்வாகிகள் புகார் அளித்தனர்.

நான்கு போலீசார்

இதன் காரணமாக, சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. நாளடைவில் அப்பிரச்னை முடிவுக்கு வந்த நிலையில், போலீஸ் பாதுகாப்பு மட்டும் விலக்கிக் கொள்ளப்படாமல் இன்று வரை தொடர்கிறது. சூர்யா வீடு முன், ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த நான்கு போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சூர்யா குடும்பத்துடன் மும்பையில் தங்கியிருந்த போதும், அவரது சென்னை வீட்டுக்கு அரசு செலவில் பாதுகாப்பு அளிக்கப்படுவது ஏன் என, பல தரப்பிலும் கேள்வி எழுப்பப்படுகிறது. இதுகுறித்து, சமூக ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில், 'நடிகர் வீட்டுக்கு யாருடைய உத்தரவுபடி, எந்த தேதியிலிருந்து ஆயுதப்படை போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்' என்று கேட்டிருந்தார். அதற்கு, 'போலீஸ் கமிஷனர் உத்தரவுபடி, 2021 நவ., 15 முதல் தற்காலிகமாக பாதுகாப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு மறு ஆய்வு குழு தீர்மானத்தின்படி, பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது' என, பதில் கிடைத்தது.

மும்பையில்...

அதேநேரத்தில், 'பாதுகாப்பு அளிக்க, சூர்யா ஏதாவது பணம் செலுத்துகிறாரா' என்ற கேள்விக்கு, 'இல்லை' என்றும் பதில் அளித்துள்ளனர்.பொது இடங்களில் நிகழ்ச்சி நடந்தால், அதற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் முதல் அதிகாரிகள் வரை, ஒவ்வொரு பதவிக்கு ஏற்ப பணம் வசூலிக்கப்படும். பணம் வசூலித்த பின்னரே, சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி நடத்த போலீசார் அனுமதி வழங்குவர். அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் போது, சம்பந்தப்பட்ட நபர் காவல் துறைக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இரண்டரை ஆண்டுகளாக, நடிகர் சூர்யா ஒரு ரூபாய் கூட செலுத்தாமல் இருப்பதுடன், அரசு செலவில் அவரின் வீட்டிற்கு பாதுகாப்பு அளித்து வருவது எந்த விதத்தில் நியாயம் என, சமூக ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், தற்போது சூர்யா தன் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். இருந்தும், சென்னையில் உள்ள வீட்டிற்கு தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வர காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து, போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'அமைச்சர் ஒருவரின் பரிந்துரைப்படி, பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது' என்றார்- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Dhandapani
மே 19, 2024 08:10

ஜோதிகா ஏன் கேட்கணும் சார், ஏன் பழம்பெரும் நடிகர் சிவகுமார் கேட்கமாட்டாரா, இரண்டுமணிநேரம் மஹாபாரத கதை சொல்லும் இவர் நம்வீட்டிருக்கு பாதுகாப்பு தேவை என்றால் தனியார் பாதுகாப்புப்படை நியமிக்கலாம், சிவகுமார் நாலும் தெரிந்தவர் மௌனம் காப்பது ஏன் சார்


Mani . V
மே 17, 2024 21:56

ஏத்தா ஜோதிகா, மக்களின் வரிப்பணத்தில் ஆளே இல்லாத நடிகரின் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுத்து விரயம் செய்கிறார்களே ஒரு பொங்கு பொங்கி இதைக் கேட்க மாட்டாயா?


முருகன்
மே 17, 2024 20:53

தாக்குதல் நடந்தால் அதை வைத்து அரசியல் கூடாது என்பதற்காக தான் இந்த பாதுகாப்பு


Prabakaran J
மே 17, 2024 17:32

Chandru(surya) also not rejecting police protection, maybe they will not treat(police) like gurumoorthy na fine - Jaibhim. we have to approach IG perumalsamy regarding this - Jaibhim2


ஸ்ரீ
மே 17, 2024 14:34

எந்த கம்பனையும் குறை சொல்லமுடியாத ஆட்சி?


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 17, 2024 13:03

இப்படி எல்லாம் செய்து கொடுத்தால் தான் ரெட் ஜெயன்ட் பட தயாரிப்பு நிறுவனம் சொல்வதை எல்லாம் சினிமா நடிகர்கள் நடிகைகள் செய்வார்கள் அதன் மூலம் சன் டிவி கலைஞர் டிவி மற்றும் திமுக ஆதரவு டிவிக்கள் பத்திரிகைகள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வளமுடன் நலமுடன் வாழ முடியும் நமது தமிழக சினிமா பைத்தியங்கள் சந்தோஷமாக இருக்கும் மாதம் பெறும் மகளிரும் சினிமா டிவி கண்டு களித்து மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் எல்லாம் ஒரு பொது சேவைக்காகத்தான்


தமிழ்
மே 17, 2024 12:31

ஓங்கி அடிச்சா ஒன்னரை டன்.. ஆளு ஒரு கிலோ அடியே தாங்கமாட்டாரு. அதான்.


K.SANTHANAM
மே 17, 2024 12:29

துட்டு வாங்கிட்டு ஓட்டு போடற கலாச்சாரம் தமிழகத்தில் இருக்கும் வரை இது மாதிரியான நிகழ்வு நடந்து கொண்டு தான் இருக்கும்


ஆரூர் ரங்
மே 17, 2024 12:18

கோவிலுக்கு நன்கொடை அளிப்பதற்கு பதிலாக ஆஸ்பத்திரிக்கு கொடுங்கள் என்ற ஜோதிகா இப்போது எங்கே? வரிப்பணத்தை வீணாக்கும் போது கேள்வி கேட்கவில்லையே. மக்களுக்கு இல்லாத பாதுகாப்பு இவர்களுக்கு ஏன்? இவர்கள் படங்களில் ஊருக்கு உபதேசம் செய்கிறார்கள். நிஜத்தில்? (இன்று காலை முதல் போலீஸ் காவலை காண முடியவில்லை.நன்று)


ram
மே 17, 2024 11:51

ஒரு கூத்தாடி நடிகைக்கு விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு, கார் ரேஸ் ரோடு போட்ட அரசாங்கம் மக்கள் பணத்தில் இந்த ஆளு மனைவி கோவிலுக்கு செலவு செய்வது எதற்கு என்று கேட்டார்களே, இதற்கு என்ன சொல்ல போகிறார்கள் காவல் துறையை இவர்கள் வீடு வேலைக்காரர்கள் மாதிரி நடத்துகிறார்கள்


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை